பக்கம்:பூங்கொடி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

95

100

105

110

இசைப்பணி புரிந்த காதை

சண்டிலி வரலாறு

ஒன்றுனே வேண்டுவல், உன்வர லாற்றினை இன்றுனர் விழைவினென், என்பால் உரைத்திடல் நன்றெனின் நவிலுதி என்னலும் நங்கை அாமென் கொடியைத் தொழுதனள் உரைக்கும்,

கோமகள் கினக்குக் கூறுதல் என்கடன் விந்தங் கடந்தொரு வியனகர் உண்டு நந்தலில் செல்வ கலத்தது வளத்தது, அந்தம் மிகுந்தது எந்திரக் கொழிலது, தக்கை அவ்வூர்த் தலைமகன் ஆவர், செந்தமிழ் முதலாச் செம்மொழி பலவும் சிந்தித் தாயும் திறனும் உடையார் ; முங்கை நகர்க்கு மொழிபெயர் அளகை : அங்கர் வாழ்வேன், அன்புறு கொழுநன் கன்னெடு கென்திசைக் கண்மலை எழிலெலாம் காணிய வந்தனென் : கண்கவர் நெடுமலை, சேணுயர் முகிலினம் சென்றிடை கழுவும் நீலப் பெருமலை, நீடுயர் சாரல் கோலத் திருமலை, கோடைக் கொடுமையைச் சோலைச் செறிவால் தொலைத்திடு முதுமலை

இன்னன பலகண் டின்புறும் எல்லேயில்

பொதிகைக் காட்சி

தென்திசைப் பொதியில் காணிய வந்தேன் ; முடியும் நடுவும் முகிலினம் படர்தரக் கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிக் சில்லெனுந் தென்றல் மெல்லென விச கல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/136&oldid=665613" இலிருந்து மீள்விக்கப்பட்டது