பக்கம்:பூங்கொடி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழின் சிறப்பை உணர்த்தி, ஆங்காங்குள்ள அறிவியல் நூல்கள் பலவுங் கொண்டு தமிழகம் திரும்பினுள். புதுப்புது ஆால்கள் படைத்தாள். தமிழ் மொழி குறித்து எதிர்ப்புரை பகர் வார் பலருடனும் சொற்போர் புரிந்து தமிழுக்கு வெற்றி தேடித்

தந்தாள்.

தமிழகத்தே மொழிப் பற்றுடையர்ர் பல ரு ம் கூடி, மாநாடு ஒன்று கூட்டி, மொழி காக்க அறப்போர் தொடுப்ப தென்று முடிவு செய்தனர். அறப்போர் தொடங்கியது. அதல்ை, அருண்மொழி முதலாகப் பலரும் சிறை ஏகினர். பூங்கொடியும் பொங்கிய உணர்வால், பூரிப்புடன் சிறையகம் புகுந்தனள், சிறையில் அப்பெருமாட்டி நோய்வாய்ப்பட்டாள். நோயின் கொடுமை மிகுதிப்பட, மருத்துவமனைக்கு அவளே எடுத்துச் சென்றனர். அங்கும் நோய் தணிந்திலது. இதனேக் கண்ட அரசு விடுதலே ஆணே பிறப்பித்தது. அவ்வாணை வருமுன், பூங்கொடியின் உயிர் அவள் உடலிலிருந்து விடுதலை பெற்றது.


X Wi

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/19&oldid=665672" இலிருந்து மீள்விக்கப்பட்டது