பக்கம்:பூங்கொடி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

25

30

35

40

சொற்போர் நிகழ்த்திய காதை

கொடுத்திடும் துயரெலாம் குலக்கொடி உதறினள், தொடுத்திடும் கணேயென அடுத்தடுத் திருந்து விடுத்தனர் வினுக்கள் வெருவிலள் பூங்கொடி,

பிறமொழி வெறுப்பு நன்றாே?

பிறமொழி வெறுத்தல் பேதைமை யாகும் அறமன முடையோர் அவ்வணம் செய்யார் குறுமன மிஃதாம் விரிமனம் வேண்டும் யாதும் ஊரென ஒதிய நாமோ திகெனப் பிறமொழி செப்பித் திரிவது? மோதும் பகைமை முகிழ்ப்பது நன்றாே நல்லுரை இவ்வணம் நவில்வது போலச் சில்லுரை சிலர்சிலர் செப்பித் திரிந்தனர்;

பூங்கொடி மறுப்புரை

மறுப்புரை அவர்க்குக் கொடுத்திடும் பொறுப்பினள் விரித்துரை வழங்கி விளக்கினள் இவை இவை:

அகத்தும் பிறமொழி வெறுத்திடல் அறிகிலம் பகுத்தறி வுடையோம் பண்பும் உடையோம் வேண்டும் மொழிகளை வேண்டுவோர் பயின்றீங் கீண்டி யுறையுநர் எண்ணிலர் அறிக!

குறுமனம் அன்று

குறுமன. மென்றும் விரிமன மென்றும் சிறுமண முடையோர் செப்புவ கொள்ளேல்! தனியொரு மாந்தன் தன்னலம் பேணின் முனியத் தகுமது குறுமன மாகும்; கன்னல மறுப்பது விரிமன மாகும், முன்னவர் பேணிய மொழியும் நாடும்

213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/232&oldid=665719" இலிருந்து மீள்விக்கப்பட்டது