பக்கம்:பூங்கொடி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

20

25

30

35

மருண்மனங் கொண்டு மங்காப் கின்னே இவ்வூர் மாக்கள் இகழ்ந்துரை கூறினர் ;

அருண்மொழியின் இசைப்புலமை செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி இசைபல முயன்று வசையற வுணர்ந்து கசையுடன் ஆய்ந்து கம்தமிழ் இசைக்கே ஆக்கம் தங்கவள் , அரியதோர் இசைப்புனல் தேக்கிய கலைக்கடல் , தெள்ளிய இசையால் உலகை வென்றவள் : உயர்ந்தவள் குரலால் குழலும் யாழும் கொட்டம் அடங்கின : பாடும் முறையாற் பாவை பாடுவள் ; ஆடாள், கோணுள், அங்கக் குறும்புகள் நாடாள், அந்த நல்லிசைச் செல்வி வாயிதழ் விரியின் வானிசை கேட்கும் சேயிதழ் மலர்க்கை தாளச் சீர் இடும் அன்னவள் காணு அரங்கம் இல்லை

பொன்மிகக் குவித்தாள் புகழோ மிகுத்தாள் ;

ஊரார் பழிமொழி இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ? செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப் பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு

அருண்மொழி அலருக்குக் கூசாமை

அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்; பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும்

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/27&oldid=665760" இலிருந்து மீள்விக்கப்பட்டது