பக்கம்:பூங்கொடி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

45

50


60

பழியுரை காதை

கினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே, ஆருயிர்க் கோழி! அந்நாள் வடிவேற் பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற் கொழுநர் என்று கொண்டபின் ஊரார் இழிசொல் எத்துணே ஏசினர் அறியாய் ? கலப்பு மணத்தைக் கடிந்துரை யாடினர் கலைத்தொழில் புரிந்தேன் கற்பினைப் பழித்தனர் மலைத்திலேன் சிறிதும், மனமுங் கூசிலேன் ,

வள்ளி குறிக்கோள் வாழ்வினள்

அவர்முகன் மனையாள் அரும்பெறல் வள்ளி, எவர்துயர்ப் படினும் எழுந்துடன் சென்று o துன்பம் நீக்கலில் இன்பங் கொள்வாள் ; என்பும் பிறர்க்கே எனுங்குறி வாழ்வினள் : பொதுநலக் கொண்டே புந்தியிற் பதிந்தவள் ; னதுசரி என மனம் எற்குமோ அனேக் துயர்பல கேரினும் துணிவுடன் ஆற்றும் அயர்விலாக் கணவர் அரும்பணிக் கியைந்தவள் : அடிமை வாழ்வில் அருவருப் புற்று விடுதலை வேட்டு வீறு ற் றெழுந்த நல்லவன் ஒருவனே நாப்மகன் சுடுங்கால் ஒல்லென ஒடி ஒப்புயர் வில்லாள் தன்னெஞ் சேற்றுத் தான்மடிங் கனளே !

வள்ளியின் மகளே பூங்கொடி

வன்னெஞ் சினர்.அவ் வள்ளியின் வாழ்வை இகழ்ந்ததும் அறிவேன் ; என்வயி மீன்ற மகளே யாயினும் வள்ளியின் மகளே பூங்கொடி என்று பொருத்தினேன். ஆதலின்

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/28&oldid=665769" இலிருந்து மீள்விக்கப்பட்டது