பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

ஏதாவது ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இதுதான் சமயம்' என்று கருதி, உடனே சர்விஸைப் போட்டு விடுவார்கள்.

குறுக்கு வழியிலே 'வெற்றி எண்' (Point) பெற அவர் முயற்சிக்கிறார் என்பதையே குறிக்கிறது. தங்கள் பகுதிக்குத் திடீரென்று சர்விஸ் வந்தவுடன், திகைத்துப்போய், தயாராக இல்லாத குழுவினரும் தடுமாறி, அவசர கோலத்தில் பந்தை எடுத்தாட முயல்வதும் உண்டு.

இது போன்ற சமயங்களில், ஆட்டத்தை நிறுத்தி விட்டு, மீண்டும் சர்விஸ் போட உத்தரவு இடுவதுதான் நல்ல நடுவருக்குரிய பண்பாகும்.

குறுக்குவழி ஆட்டம், கெடுமதிப் பண்புகள் எப்பொழுதும் ஆட்டத்தில் தலைதூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நடுவரின் தலையாய கடமையாகும்.

5. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது

ஒரு குழு அதிகமான 'வெற்றி எண்களை' எடுத்து, முன்னணியில் நின்று ஆடிக்கொண்டிருக்கும்பொழுது, குறைவான 'வெற்றி எண்களை'ப் பெற்றிருக்கும் எதிர்க்குழு, எதிர்க்குழுவினரின் ஆட்ட வேகத்தையும், விறுவிறுப்பையும் குறைத்துவிடும் வகையில், வேண்டுமென்றே ஆட்டத்தைத் தாமதப்படுத்திக் (Delay) கொண்டிருப்பார்கள்.

ஆட்ட நேரத்தில் இடைவேளை நேரமென்று தனியாக எதுவும் ஒதுக்கப்படவில்லை. அப்படி விடவேண்டும் என்ற விதிமுறைகளும் இல்லை. நடுவர்தான், தனது