பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

 யாரும் எந்தவித முறையீடும் செய்யாமல் இருந்து விட்டால், அப்படியே ஆட்டத்தைத் தொடர்ந்தாடிட அனுமதித்துவிட வேண்டும்.

10. ஆடுகளத்திற்கு வெளியே போகின்ற பங்தை எடுத்தாட முயற்சித்தார் (Attempt) என்கிற விதியில் தான் பல சிக்கல்கள் முளைத்துக் கிளைத்தெழுவதுண்டு, பலர் பலவிதமான அபிப்ராயங்களை, அந்த சமயத்தில் கொண்டிருந்தாலும், அதை தீர்மானித்து முடிவெடுக்கக்கூடிய நிலையில் இருப்பது நீங்கள்தான்.

தனது பக்கமாகப் போகின்ற பந்தை எடுப்பதறகாகத் தன்னுடைய பந்தாடும் மட்டையை பந்து போகும் பக்கமாக அசைத்து ஆட முயற்சிப்பதையே முயற்சித்தல் (Attempt) என்கிறோம்.

சில சமயங்களில், ஒரு ஆட்டக்காரர் பந்தை எடுப்பதற்காகக் கொண்டுப்போகும் பந்தாடும் மட்டையை, சிறிதும் அசைக்காமல் அப்படியே வைத்துக் கொண்டு. தன் எண்ணத்தில் பின் வாங்கி விடுவதும் உண்டு; அதாவது, அவர் ஆட முயற்சிக்காமல் இருந்துவிடுவது உண்டு.

ஆகவே, ஆட முயற்சித்தல் (Attempt) என்பதையும், முயற்சியில் பின்வாங்கல் (Attempt Retracted) என்பதையும் பேதம் பிரித்துணர்ந்த பிறகே, ஒரு முடிவுக்கு வரவேண்டியது உங்கள் கடமையாகும்.

11. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது எந்த விஷயத்திலாவது உங்களுக்கு - சந்தேகம் வந்து விட்டால், அதற்காக ஒருதலைப் பட்சமான முடிவுக்கு நீங்கள் வந்துவிடக்கூடாது. சந்தேகம் வந்துவிட்டால்