பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

 3. போட்டி ஆட்டத்தில் பங்கு பெறுகின்ற இரண்டு குழுவினரும் ஆட்டம் தொடங்கியவுடனேயே நடுவர்களின் கட்டுப்பாட்டில், ஆதரவில் இருந்து தான் ஆடுகின்றார்கள் என்பதை நடுவர் மறக்கவே கூடாது.

ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்பொழுது பார்வையாளர்களின் வீராவேசம். அவ்வப்போது வெளிப்படும் அந்த, வீராவேசம் வெறித்தனமாகக் கிளம்பி, ஏதாவது ஒரு குழுவைத் தாக்கச் செய்யும். பெருங்கூச்சலைச் கிளப்பும். ஆட்டத்தின் அமைதி சூழ்நிலையை மாற்றி விடும். சில சமயங்களில், ஏச்சும் பேச்சும் அதிகமாகி ஆடுகின்றவர்களுடைய மனோநிலையையும் தாக்க மாற்றிவிடும்.

இவ்வாறு பொதுமக்கள், பார்வையாளர்கள் இடையீடு ஆட்டத்தில் நேர்கிறபோது, நடுவரே நேராகப்போய் பார்வையாளர்களையோ, பொதுமக்களையே தடுத்துவிட முடியாது. அவ்வாறு போய் பேசவும் கூடாது. ஆதலால், நடுவர் போட்டி நடத்தும் விழா குழுவினரை அழைத்து, சூழ்நிலையை சமாதான படுத்துமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். முடிந்தால் பார்வையாளர்களை அமைதியுடன் இருக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளலாம்.

நிலைமையானது கட்டுக்கடங்காமல் இருக்கும்போது மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது மாபெரும் தவறாகும். அது, ஆட்டக்காரர்களின் ஆடு உரிமைக்கு இழைக்கின்ற் பெரிய அநியாயமாகும் ஆகவே, ‘’குழப்பச் சூழ்நிலையானது கட்டுக் கடங்கி ஒழுங்கான நிலைக்கு வரும்வரை ஆட்டம் நிறுத்தப்படடிருக்கிறது‘’ என்று அறிவித்து விடுவதற்குள் நடுவர் பலமுறை எண்ணித் துணிந்தே கூறவேண்டும்.