பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

8. பந்தை வலிமையாக அடித்தாலும் சரி, அல்லது மெதுவாகத் தள்ளி அனுப்பினாலும் சரி. எதிர்க் குழுவினர் பகுதியில் ஆளில்லாத இடம் பார்த்து (Gap) அனுப்புவதுதான் முறையான ஆட்டமாகும்.

இத்தகைய பண்புள்ள முன்னாட்டக்காரர்களை ஒரு குழு தன்னகத்தே கொண்டிருந்தால், மிக அருமையானதொரு ஆட்டத்தை ஆடிக் காட்டுவதுடன் சிறப்பான வெற்றியையும் அடைய முடியும் என்று உறுதியாகக்கூறலாம்.

3. பின்னாட்டக்காரர்கள் (Back Players)

ஒரு குழுவின் வெற்றிக்கும் தோல்விக்கும், பின்னட்டக்காரர்கள் இருவருமே பெரிதும் காரண கர்த்தாக்களாக அமைந்திருக்கின்றார்கள்.

அவர்களது பணி எப்பொழுதும் அடித்தாடும் ஆட்டம் (Offence) அல்லது எடுத்தாடி அனுப்பும் ஆட்டமாகவே அமைந்திருக்கும் (Defence).

வருகிற பந்தை எடுத்தாடி எதிர்க்குழுவிற்குரிய கடைசிக் கோட்டின் பக்கமாகவே அனுப்பிவைத்து, அவர்கள் (தவறாக) ஆடி தங்களது முன்னாட்டக்காரர்களுக்கு அல்லது மைய ஆட்டக்காரருக்கு அடிப்பதற்கு ஏற்றவாறு அமைவது போல, நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதுதான் இவர்களது ஆற்றல் மிகுந்த அரும் பணியாகும்.

அதற்காக அவர்கள் இருவரும் பந்தை உயர்த்தி உயர்த்தியே (Lob) அனுப்பிக் கொண்டிருக்க வேண்டுமா என்றால், அப்படி அல்ல. வாய்ப்பு