பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60


6. இரண்டு முன்னாட்டக்காரர்களுக்கும் இடையில் வலையோரமாக, மைய ஆட்டக்காரர் பின்னால் நிற்கும்போது , அவராலும் ஓடிவந்து எடுக்க முடியாதவாறு பந்தை எதிராளிகள் இடம் பாாத்துப் போடும்போது: இடப்புறத்தில் இருக்கும் முன்னாட்டக்காரர்தான் ஓடி வந்து எடுக்கவேண்டும். வலப்புறத்தில் இருப்பவர் ஓடி வந்து எடுக்கக்கூடாது. அவரால் நன்றாக எடுக்க முடியாத நிலையில் தானே இருக்கிறார்! ஆகவே, அது போன்ற பந்தை இடப்புற ஆட்டக்காரர் தான் எடுத்தாட வேண்டும். முன்கைப் புறத்தில் (Fore hand) இவரால்தான் எடுத்தாட முடியும் என்பதுவே முக்கில் காரணமாகும்.

7. சில சமயங்களில், முன்னால் நின்றாடும் ஆட்டக் காரர்களுக்குத் தங்களுக்கு பந்து வருவது போல்தான் தோன்றும். ஆனால் அது பின்புற ஆட்டக்காரர்கள் எளிதாக எடுத்தாடுவதற்கு ஏற்ற நிலையில் போகும். அல்லது மைய ஆட்டக்காரர் மிக செளகரியமாக நின்றாடக் கூடிய தோதுவில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையை உணர்ந்து, பந்தினை பின்னால் இருப்பவர்களுக்கு விட்டாடுவதுதான் நல்ல ஆட்ட முறையாகும்.

அவ்வாறின்றி, தானே எடுத்தாடிட வேண்டும. என்ற நினைப்பில், அடிக்கடி பின்னால் நிற்பவர்களிடம் போய் மோதிக்கொள்வது ஆட்ட அமைப்பினையே சீா் குலைத்துவிடும். ஆட்டத்தின் ஒழுங்கு முறையும் மாறி குழப்பமான நிலைக்கும், கொந்தளிக்கும் உணர்வுகளுக்கும் இடம் கொடுத்துவிடும் என்பதால், முடிந்தவரை தனது இடத்தைக் காத்து தவறின்றி ஆடிக்கொள்வதுதான் புத்திசாலித்தனமான ஆட்டமாகும்.