பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


அதேபோல், வலையோடு உராய்ந்துகொண்டு வருவது போலவும் சிலர் சர்விஸ் போடுவார்கள். அதனையும் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து தடுத்தாட வேண்டும்.

4. எதிராளி சர்விஸ் போடும் நேரத்தில், தனது பாங்கரின் ஆடுகளப் பகுதியில் (Partner’s Court) நிற்கும் போது, அவரது இடத்தையும் காத்து நின்று ஆடி விட்டு, சர்விஸ் போட்டு முடிந்து ஆட்டம் தொடங்கியவுடனே, தான் ஆடக்கூடிய இடத்திற்கும் ஓடிவந்து, வரப்போகிற பந்தை எடுத்தாடுவதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

5. எதிராட்டக்காரர்கள் அடித்தாடுகின்றார்கள் என்றால், எப்பொழுதும் பக்கக் கோடுகள் (Side Lines) பக்கமாகத்தான் இருக்கும். ஆகவே, பக்கக் கோடுகளுக்கும் தனக்கும் இடையே அதிக இடைவெளி விட்டுவிடாமல் இடத்தைக் காத்து நின்று ஆட வேண்டும்.

பக்கக் கோட்டின் பக்கமாக வருகின்ற பந்தை தடுத்தாடுவது மிகக் கஷ்டமான காரியம் என்பதால், ஒவ்வொரு முன்னாட்டக்காரரும் தனது பக்கக் கோட்டின் பகுதியையே காத்து ஆடிட வேண்டும்.

ஆடுகள மத்தியிலே வருகின்ற பந்தானால், மைய ஆட்டக்காரர் எளிதாக எடுத்தாடி விடுவார். ஆகவேو முன்னாட்டக்காரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர், அப்படித்தான் ஆடவேண்டும்,இன்ன நேரத்தில் இன்ன இடத்தைக் காத்து ஆடவேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டு பேசிக்கொண்டு செயல்படுதல் வேண்டும்.