பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டக்காரர் (Left Forward). இன்னெருவர் வலப்புற முன்னாட்டக்காரர் (Right Forward) என்ற பெயருடன் அந்தந்த இடத்தில் நின்று ஆடுகின்றார்கள்.

இவர்கள் இருவரும் வலையோரத்தில் நின்று ஆடுகின்றார்கள். கோட்டையின் முன்னே நின்று காக்கும் சிப்பாய்களைப் போல, இவர்களின் கடமை அமைந்திருக்கின்றது.

அவர்கள் இருவரும் எவ்வாறு ஆடவேண்டும் என்ற முக்கிய குறிப்புக்களாகச் சிலவற்றைக் கீழே கொடுத்திருக்கிறோம்.

1. எதிர்க்குழுவினர் அடித்தாடி வருகின்ற பந்தை வலைக்கு மேலே தடுத்தாடுவதில் (Shut) நல்ல சமர்த்தர்களாகவும், சாதுர்யம் நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

2. அதேபோல், வலைக்கருகிலும் தங்களுககு அடிப்பதற்கேற்ற உயரத்தில் வருகின்ற பந்தை வலிமையாக அடித்து, எதிராட்டக்காரர்களை எடுத்தாட முடியாமல் திணரவைத்து, வெற்றி எண்களைப் பெற்று தருகின்ற வீரர்களாகவும் விளங்க வேண்டும்.

நல்ல முன்னாட்டக்காரர் இருந்தால், எதிராட்டக்காரர்கள் அச்சமுடன் தான் ஆடவேண்டும் என்ற நன்மொழிக்கேற்ப, முன்னாட்டக்காரர்கள் தங்களை தேர்ச்சியுற்றவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

3. எதிராளி சர்விஸ் போடும்போது, வலையோரமாக நின்று இடம் பார்த்துப் (Placing) போடாதவாறு காத்துக்கொண்டு (Cover) ஆடவேண்டும்.