பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(Right court) நிற்கச் செய்து ஆடவிடவேண்டும். அப்பொழுதுதான் தன் இ-த்தையும் காத்துக் கொண்டு, அத்துடன் சுமாரான ஆட்டக்காரர்கள் இடத்தையும் காத்து ஆடுவதற்கு வசதியாக இருக்கும்.

வலப்புற ஆடுகளப் பகுதியில் நின்றாடும் ஆட்டக்காரர்கள், நேராக வரும் பந்தையும், தங்கள் வலம்புறமாக வரும் பந்தையும் எளிதாக எடுத்தாடி விட முடியும். இடப் புறமாக வரும்போது தானே எடுத்தாடுவது கஷ்டம்! அப்படி பந்து வந்தால், அதை மைய ஆட்டக்காரரோ அல்லது இடப்புறத்தில் நிற்கும் ஆட்டக்காரரோ யாராவது ஒருவர் எடுத்தாடிவிடுவார்; அதனால்தான் அவர்களை ஆடுகளத்தில், வலப்புறப் பகுதியில் நிறுத்தி வைக்க வேண்டும் என்கிறோம்.

12. தேவையானால், குழுவினர் சரியாக ஆடி முடிக்க, ஆட்டக்காரர்களின் இடத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று முன்னர் கூறியிருந்தோம்: அதற்காக, ஆடும் இடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறு மாற்றத் தொடங்கினால் , உள்நாட்டுக் குழப்பத்தை உண்டாக்கி விடுவதுடன், எதிராட்டக்காரர்களுக்கும் தங்களுடைய இயலாமையையும் ஆட்டக் குறைபாட்டையும் வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் அமைந்துவிடும். அதனால் எதிராட்டக்காரர்கள் இன்னும் தைரியமாக ஆடவும்: ஓர் உற்சாகமான ஆட்டத்தை ஆடி விடத் தூண்டுகோலாகவும் அமைந்து விடும்.

13. எதிராட்டக்காரர் இடுகின்ற 'சர்விஸ்' பந்தானது நடுக்கோட்டில் விழும் என்ற சந்தேகப் இருந்தால், எடுக்காமல் விட்டு விடலாம். எடுக்க் வ்ேண்டும் என்ற நிலை வந்தால், அதை 'இடப்புற