பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. பந்தை உயர்த்தி ஆடுதல் (Lob or Float)

பந்தை உயர்த்தியவாறு எதிர்க்குழு ஆடுகளம் பகுதிக்கு அனுப்பி விடுவது ஒரு அரிய கலையாகும். இது பத்திரமாக எடுத்தாடும் ஆட்டத்தின் தலையாய பகுதியாகும்.

இதற்குத் தேவை தன்னையும் மீறி பீறிட்டுக் கிளம்பி விடாத பொறுமையுணர்வு (Patiene). எதிர்க்குழு பகுதிக்குத் தவறில்லாமல் அனுப்பி விடக்கூடிய அளந்தாடும் திறன் (Judgement).

பந்தை அடிக்கலாம் என்ற உள்ளுணர்வின் ஊக்கக் குரல். அடித்தால் நிச்சயம் வெற்றி எண் கிடைத்து விடும் என்ற தைரியத்தின் ஆணை. தன்னம்பிக்கையின் சவால். எல்லாம் சேர்ந்து கொண்டு பொறுமையுணர்வைப் பிய்த்தெடுத்துவிடும். என்றாலும் ‘பொறு மனமே பொறு’ என்று மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பொறுமையாகப் பந்தை உயர்த்தி அனுப்பி விடுவதால், எத்தனையோ பயன்கள் உண்டு.

1. ஆட்ட நேரத்தில் எதிராளியின் ஆட்ட வேகத்திற்கும் விநயத்திறகும் தாக்குபிடிக்க முடியாமல் நிலைகுலைந்து போயிருக்கின்ற நேரத்தில், அதிலிருந்து மீண்டு வந்து, சரியான ஆட்டத்திற்குத் தன்னை சரிசெய்து கொள்ள, இவ்வாறு உயர்த்தி ஆடும் முறை கை கொடுத்து உதவுகிறது.

2. தனக்கு சரியாக ஆட்டம் பிடிக்காத நிலையில், அடித்தாடி அன்றைய ஆட்டத்தை வீணடித்து வெற்றியை இழந்திட விரும்பாத நிதானமான ஆட்டக்காரருக்கு, எடுத்தாடி ஆடுகின்ற ஆட்டம் எதிரியின்