பக்கம்:பூமியின் புன்னகை.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஒர் பேரொளி இன்றில்லை


இமயமலை போன்றிருந்த மிகப்பெரிய
எம்தலைவர் இன்றில்லை இனியில்லை

சமயமறிந் தெப்பணியும் பொருத்தமுறச்
சாதிக்கும் சதுரரவர் வாழ்வினிலே

அமைதிமிகு பேருருவத் தண்ணல்
அருளாளர் காந்திவழி ஆதரிப்பார்

குமையும் இருட்குகையில் தவிப்போர்க்குக்
குத்துவிளக்கொளியாய் அவரிருந்தார்
இன்றில்லை

விரோதங்கள் தேடிவரும் காலத்தும்
வித்தகமாய் நட்புறவு நாடுகின்ற

குரோதங்கள் இல்லாத பெருந்தலைவர்
கொள்கையினில் சமதர்மப் பெருவீரர்

தராதரங்கள் அறிவதிலே இப்புவியில்
தமக்குநிகர் எவருமில்லை எனற்குரியர்