பக்கம்:பூமியின் புன்னகை.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மலர்களைத் தேடி


• பூமியில் வல்லவர் நடுவினிலே-நான்
பொய்யை எதிர்த்துக் கொதிக்கின்றேன்

மாமிசம் விற்பவர் நடுவினிலே-நான்
மலர்களைத் தேடித் தவிக்கின்றேன்

பசியைக் காட்டிப் பயமுறுத்தல்-வெறும்
பலத்தைக் காட்டிப் பயமுறுத்தல்

வசியப்படுத்தி வசப்படுத்தல்-என்
வாழ்வைக் காட்டி அதிரவைத்தல்

சாதியைக் காட்டித் துாற்றிடுதல்-ஒரு
சாதியும் இல்லா மானிடத்தைப்

பேதப் படுத்திப் பிழைத்திடுதல்-இவை
பெருகிப் படரும் காலத்தில்

நீதியைத் தேடிப் புறப்பட்டேன்-நான்
நெடுந்தூரம் ஓடிக் களைத்துவிட்டேன்

பாதியில் திரும்ப மனம் இல்லை-என்
பாதையை மாற்றவும் நினைக்கவில்லை

பூ-2