பக்கம்:பூமியின் புன்னகை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




புதுக் கவிஞர் கண்ட
பொதுத் தேர்தல்!

•பம்பரம்போல் சுற்றிவரும் பலகார்கள்
பலகாரம் தேநீர் பணப்பை

எம்பெருமான் படைத்தறியாச் சூழ்ச்சிகளும்
ஏராளம் ஏராளம் இடைமிடைந்து

தம்பெருமை வளர்த்திடவும் பிறர் பெருமை
தடுத்திடவும் இசைவான சொற் சிலம்பம்

அம்பலத்தே மேடையிட்டு ஆராரோ
அறைகூவிப் பேசிடுதல் இவையெல்லாம்

அம்புவியில் தேர்தல்நாள் அடையாளம்
‘அய்யா வணக்கம் நினைவிருக்கட்டும்!

நம்புவியைச் சீர்த்திருத்தி நம்பகமாய்
நன்மைசெயத் தேர்தலுக்கு நிற்கின்றேன்'

வம்பறியாத் தொண்டுசெய முன்வந் தேன்
வாக்கெனக்குத் தரவேண்டும் நீரெல்லாம்