பக்கம்:பூமியின் புன்னகை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

55


பரணிபாடும் ஊர்வலங்கள் இவைஎல்லாம்
பகட்டுக் குறையாமல் எனக்குவேண்டும்.

ராஜாக்கள் மானியத்தை ஒழித்துவிட்டேன்
நாளைக்கே ஏழைகளைக் களிக்கவைப்பேன்

கூஜாக்கள் போலந்த ஏழைகளைக்
கூப்பிட்டே என்தன்னை வணங்கவைப்பேன்

‘தேஜோ’க்கள் போலிங்கு பணம்சுருட்டிச்
சென்றுவிட்ட பேர்களையும் மன்னிப்பேன்-ஆயின்

ராஜாக்கள் மானியத்தை ஒழித்துவிட்டேன்-இனி
ராஜாவும் ராணியுமாய் நானாவேன்.

ஒருவகையில் மன்னர்களை ஒழித்து விட்டோம்
ஒவ்வொருத்தர் நெஞ்சினிலும் தலைப்பாகை

வரும்வழியில் கார்நிறுத்தி மாலைசூட
வருவோரை வழிநாடும் புகழாசை

தரும்பணத்தைப் பரிசாகத் தரவேண்டும்
தந்தவற்றைப் பொதுமக்கள் மறக்கவேண்டும்

எனும்நினைவு உள்ளவரை இந்நாட்டில்
இறவாமல் மறையாமல் மன்னருண்டு.

மந்திரிகள் அனைவோரும் ராஜாவாய்
மாண்பாகிக் கிரீடங்கள் பலசூடிச்