பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பூர்ணசந்திரோதயம்-1 அதிர்ஷ்டம். முக தரிசனமாவது கிடைத்ததல்லவா, அவ்வளவோடு சந்தோஷப்படவேண்டியதுதான். நேரமாகிறது, தயவுசெய்து மகாராஜா என்னோடு கூட வெளியில் வரவேண்டும். உங்களை அழைத்துக் கொண்டு போய், நீங்கள் போகவேண்டிய வழியைக் காட்டுவதொன்றுதான் மகாராஜாவுக்கு என்னால் இனி செய்யக்கூடிய உதவி; வாருங்கள் போவோம்' என்று புரளியாகப் பேசினான். அவனது குறும்பான வார்த்தை ஒவ்வொன்றும் அவரது மனத்தில் ஈட்டிகொண்டு குத்துவதுபோல இருந்தது. வெட்கத்தினாலும், துக்கத்தினாலும், ஏமாற்றத்தின்ாலும் அவரது தேகம் மிகவும் குன்றிப்போனது. அந்தப் பெண் தம்மை எந்த விஷயத்திலும் வஞ்சிக்கவில்லையென்று அவர்உறுதியாக நினைத்தார். ஆகையால், அவள் எப்படித்தான் மறைந்து போயிருப்பாள் என்ற ஒரே சந்தேகமும் வியப்பும் அவரது மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. அவர் உடனே கட்டாரியைப் பார்த்து, 'அப்பா அடேய் அவசரப்படாதே; எனக்கு அரண்மனைக்குப் போக இப்போது அவசரம் ஒன்றும் இல்லை. நான் இன்னமும் கொஞ்ச நேரம் இவ்விடத்திலேயே இருந்து பார்க்கிறேன். அவள் எப்படியும் திரும்பி வருவாள். அவள் என்னிடத்தில் கொண்டிருக்கும் மோகம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அப்படிப்பட்ட அருமையான பெண்ணினிடத்தில் சொல்லிக் கொள்ளாமல் நான் இதைவிட்டுப் போவது பிசகு, நீ போய் அவள் எங்கே இருக்கிறாள் என்பதைப் பார்த்து எனக் குச் சங்கதியைத் தெரிவி. உன்னுடைய பிரயாசைக்குத் தக்கபடி நான் உனக்குப் பெருத்த சன்மானம் செய்கிறேன்; தயவுசெய்” என்று கெஞ்சி மன்றாடிக் கூற, அதைக் கேட்ட கட்டாரித்தேவன் கலகலவென நகைத்து, "அவள் பெருத்த மந்திரவாதியாயிற்றே. அவளாவது இனிமேல் உங்களிடம் திரும்பி வருவதாவது. வருகிறவளாக இருந்தால் அவள் இந்நேரம் திரும்பி வந்திருக்கமாட்டாளா? இனி நீங்கள் உங்களுடைய ஆயிசுகாலம் முடிய இங்கே