பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ்டுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 143 உண்மையிலேயே கோபங் கொண்டவள் போலவும் நடித்துக் கடைசியில் அவள் தனது விருப்பத்திற்கு இணங்க நினைத்து அவ்வாறு செய்திருப்பாளோ? தான் அளவு கடந்து நடலம் செய்துவிட்டதாக அவள் உணர்ந்து இப்போது தன் மனதை உள்ளபடி வெளியிட நினைக்கிறாளோ? எளிதில் இணங்காமல், அகப் பிரயாசையின்மேல் இணங்கினால், அவளது வசீகரத் தன்மையும் மதிப்பும் இன்பமும் அதிகரிக்கும் என்ற நினைவினால், அவள் அவ்வாறு நடிக்கிறாளோ? அல்லது, அவள் உண்மையிலேயே சுத்தமான நடத்தையுடைய ஸ்திரீயாக இருந்தும், தம்மைக் கண்டிக்க லஜ் ஜைப் பட்டு அவ்வாறு தயங்குகிறாளோ? என்பவைபோன்ற எண்ணிறந்த சந்தேகங்களும் யூகங்களும் எழுந்தெழுந்து அவரது மனத்தை வதைக்கலாயின. முற்றிலும் கனவிலிருப்பவர் போலத் தோன்றிய கலியாணபுரம் மிட்டாதார் மயங்கித் தயங்கி மட்டுக் கடங்கா வியப் போடு அந்தப் பெண்மணியின் முகத்தை நோக்கி, அவளது வாயிலிருந்து எவ்விதமான சொல் வரப் போகிறதோ என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தவராய் அவள்மீது வைத்த விழியை எடுக்காமல் இருந்தார். அவளது நடை நொடி பாவனையிலிருந்தும், அவள் உள்ளொன்றும் புறமொன்றுமாக நடிக்கிறாள் என்றும், அவள் உண்மையான பதிவிரதையல்ல வென்றும், கண்டிப்பாக மறுத்துத் தம்மை அனுப்பிவிட அவள் கருதவில்லை என்றும், மிட்டாதாரது மனதில் எதனாலோ ஒருவிதச் சந்தேகம் உதித்துக்கொண்டே வந்தது. அவர் வியப்பும் திகைப்பும் கலக்கமும் அடைந்து அந்த மின்னாளை உற்று நோக்கியவண்ணம் மெளனமாக இருக்க, அதைக் கண்ட பூர்ணசந்திரோதயம் மறுபடியும் அவரை நோக்கி, நான் கடைசியாகக் கேட்ட கேள்விக்கு சீக்கிரம் மறுமொழி சொல்லும்; எனக்கு நேரமாகிறது. நான் போய் வேறொரு காரியத்தைக் கவனிக்கவேண்டும்" என்றாள். -