பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பூர்ணசந்திரோதயம்-1 போகவேண்டியதன்றி, இப்படி ஆண்மையையும் மானத்தையும் விட்டு, ஒரு பெண்பிள்ளையின் காலைப் பிடிக்க எப்படித்தான் அந்த மனசு இணங்கியதோ தெரியவில்லையே! நீர் செய்த இந்த மகா கேவலம்ான காரியத்தைக் காண, என்னுடைய சர்வாங்கமும் குன்றிப் பதறிப் போய்விட்டதே. எழுந்திருமையா காலைப் பிடித்துவிட்டது போதும், எனக்குக் கால் பிடித்துவிட எத்தனையோ தாதிகள் இருக்கிறார்கள். எழுந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு உம்முடைய மனசிலுள்ள கருத்து இன்னதுதா னென்பதை இரண்டே வார்த்தையில் சுருக்கமாகச்சொல்லும். நீர் உம்முடைய மனசில் நினைத்துக்கொண்டிருப்பது இன்னதென்று நான் அறிந்து கொள்ளுகிறேன்' என்று கண்டிப்பாகவும் நயமாகவும் பேசினாள். அவளது வார்த்தைகள் ஆயிரம் ஈட்டிகள் கொண்டு குத்துவன போல இருந்தாலும், அவளது குரலின் நயமும் புன்னகையின் இனிமையும் அவளது எழில்வழிந்த அங்கங்களின் குலுக்கும் பிலுக்கும் ஒன்றுகூடி மோகனாஸ்திரங்கள்போலப் பாய்ந்து அவரது உணர்வைக் கலக்கி மதியை மயக்கிவிட்டனவாதலால், தாம் அவமானம் அடைந்துவிட்டதாக அவர் கொஞ்சமும் நினைக்காமல், தரையைவிட் டெழுந்து பக்கத்திலிருந்த ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்து கொண்டார். அவரது மனதில் அந்த ஒரு நிமிஷ நேரத்தில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மின்னல்கள்போல மறைந்தன. தாம் அவ்வளவுதூரம் பணிவாகவும் உருக்கமாகவும் நயந்து வேண்டிக் கொண்டதைக் கண்டு அவளது மனம் இளகியிருக்குமோ? தமது இளகிய பார்வைகளும், கனிவான நன்னய மொழிகளும் அவளது மனத்தைக் கவர்ந்திருக்குமோ? வசீகரமான தளுக்கையும், வெளிப்பகட்டான பதிவிரதைக் குணத்தையும், பொய்த்தோற்றமான கோபத்தையும் கொஞ்ச நேரம் வரையில் காட்டி, தான் நல்ல குலஸ்திரீபோலவும்