உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 141 மருங்காபுரி ஜெமீந்தார் மகிழ்ச்சியோடு புன்னகை செய்து, ஆகா போதும். இந்த நிமிஷம் முதல் நான் அந்த ஒரு விஷயத்தைத் தவிர, சகலமான நினைவுகளையும் என்னுடைய மனசை விட்டு ஒட்டி விடுகிறேன். அதோ நம்முடைய கல்யாணபுரம் மிட்டாதாருடைய மாளிகை இருக்கிறது. நாம் அங்கேபோய், அவருக்கும் பூர்ணசந்திரோதயத்துக்கும் நடந்த சம்பாஷணையின் முடிவை அறிந்து கொண்டு போவோம்' என்றார். அதற்கு இளவரசர் இணங்க, அவர்களது பெட்டிவண்டி கலியாணபுரம் மிட்டாதாருடைய மாளிகைக்குள் நுழைந்தது. 8-வது அதிகாரம் காளையும் - கொம்பேறி மூக்கனும் கலியாணபுரம் மிட்டாதார் தன்னை வழிமறித்துத் தனது பாதத்தடியில் உட்கார்ந்து கெஞ்சி மன்றாடியதைக் கண்ட பூர்ண சந்திரோதயம் தான் என்ன செய்வதென்பதை உணராத வளாய்ச் சிறிது நேரம் தடுமாறி மெளனமாக நின்றாள். அவரது துணிகரமான செய்கையைக் கண்டு, அவள் கடுங்கோபமும் ஆத்திரமும் கொண்டவளாகத் தோன்றினாள் ஆனாலும், அவர் தக்க பெரிய தனிகர் என்பதைக் கருதி தனது பதைப்பை ஒருவாறு அடக்கிக்கொள்பவள் போல நடித்து அவ்விடத்தை விட்டு அப்பால் நகர்ந்து நின்று, அவரை நோக்கி அருவருப்பாகப் புன்னகை செய்து, "ஐயா! என்ன இது? கல்லுளி மங்கன் வேலையா? அல்லது சண்டி வழக்கா? உமது சித்தக் கிறுக்கு, அல்லது, புத்திமாறாட்டம் அப்போதைக்கப்போது ஏற்படுவதுண்டா?முதலில் எழுந்திரும்; யாராவது வேலைக்காரர்கள் வரப் போகிறார்கள். அவர்கள் வந்தால், உம்முடைய பாடு ஆபத்தாக முடிந்துவிடும். உம்மைப் போன்ற பெரிய ஜமீந்தார்கள் மரியாதையான ஸ்தானத்தில் உட்கார்ந்து ஒழுங்காகப் பேசிவிட்டுப்