பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பூர்ணசந்திரோதயம்-1 இளவரசர், "சரி; நீர் செய்யப்போவது நல்ல யுக்திதான். ஆனால், இந்தத்திருடனுக்கு எவ்வளவோ பணம் கொடுப்பதாக நான் சொல்லிப் பார்த்துவிட்டேன். இவனை அசைக்க முடியாமல் போய் விட்டது. ஆகையால், இவன் உமக்கும் மசியமாட்டான் என்றே நினைக்கிறேன். இருந்தாலும், இன்னொரு தரம் முயற்சி செய்து பார்ப்பதில் நஷ்டமொன்று மில்லை. ஆனால், அந்தப் போலீஸ் காரனைக் கொண்டு செய்யப் போவதாகச் சொன்ன தந்திரம் பலிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த வழியில் முயற்சித்துப் பார்க்க வேண்டியதைத் தவிர, வேறே வகையில்லை. ஆனால், என்னுடைய பெயரையே நீர் இந்தப் போலீசாரிடத்தில் எடுக்கக் கூடாது' என்றார். ஜெமீந்தார், ' அந்த விஷயத்தைத் தாங்கள் எனக்குச் சொல்லவும் வேண்டுமா? தங்களோடு இதுவன்,ரயில் பழகாத புதிய மனிதனுக்குச் சொல்லுவதுபோலப் பேசுகிறீர்களே என்றார். உடனே இளவரசர், 'நிரம்ப சந்தோஷம். நீர் உம்முடைய முழுக் கவனத்தையும் இந்த விஷயத்தில் செலுத்தி என்னென்ன முயற்சிகள் செய்யவேண்டுமோ அவைகளைச் செய்து, இந்தப் பார்சீ ஜாதிப் பெண்ணின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, இவளுடைய கருத்தையறிந்து, இவள் என்னை அடையும்படி செய்யவேண்டியது உம்மைச் சேர்ந்த பொறுப்பு. அதுபோல, நான் என்னாலான சாமர்த்தியத்தை யெல்லாம் உபயோகப் படுத்தி, பூர்ணசந்திரோதயத்தை வென்று, அவள் உம்மை அடையும் படி செய்யவேண்டியது என்னைச் சேர்ந்த பொறுப்பு. இந்த ஏற்பாடு நம்முடைய சிநேகிதர்களுக்குக் கூடத் தெரியக் கூடாது. ஆனால், நாம் அடிக்கடி சந்தித்து நம்முடைய பிரயத்தனம் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதை நாம் ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொள்ள வேண்டும். அதற்கு நான் மனப்பூர்வமாக இணங்குகிறேன். இந்த உறுதி போதுமல்லவா?" என்றார்.