பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 163 மூன்றாகிறது. அவர் இன்னமும் வரவில்லையே! வராத காரணம் என்னவோ தெரியவில்லையே! என்று நினைத்த வளாய், அந்த விடுதியில் அங்கும் இங்கும் உலாவத் தொடங்க, அதே நிமிஷத்தில் அவளது வேலைக்காரன் ஒருவன் ஓடிவந்து, சேரங்குளம் இனாம்தார் வந்திருக்கிறார் என்றான். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் அவரை அழைத்துக் கொண்டு வரும்படி உடனே உத்தரவு கொடுத்துச் சேவகனை அனுப்ப, அடுத்த நிமிஷம் சேரங்குளம் இனாம்தார் புன்னகை தவழ்ந்த முகத்தினராய், அந்த விடுதிக்குள் வந்து சேர்ந்தார். இவர் இருபத்தாறு, அல்லது இருபத்தேழு வயது அடைந்தவர் என்றும், வசீகரமான அழகு வாய்ந்தவர் என்றும், ஆனால் வரம்பு கடந்த சிற்றின்ப நாட்டத்தால் இளைத்து வெளுத்துப்போன தோற்றமுடையவர் என்றும் நாம் முன்னரே கூறியிருக்கிறோம். அவர் அன்றையதினம் விலை உயர்ந்த ஆடையாபரணங்களை யணிந்து, ஜரிகைகளும், வைரங்களும் ஜ்வலிக்க, மிகவும் ஆடம்பரமாகவும் வசீகரமான தோற்றத்தோடும் வந்து சேர்ந்தார். அவர் நல்ல தீrண்யமான புத்தியுடையவர் என்பதை அவரது முகத் தோற்றமே காண்பித்தது. அவர் அந்த விடுதிக்குள் நுழைந்த போது பூர்ணசந்திரோதயம் நின்று கொண்டிருந்தாள்; அவரைக் கண்டவுடனே அவள் மரியாதையாகவும் கம்பீரமாக வும் அவரை வரவேற்று எதிரிலிருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக்காட்டி, அதன்மேல் உட்கார்ந்துகொள்ளும் படி கூறிவிட்டுத் தானும் சிறிது துரத்தில் ஒரு ஸோபாவின் மீது உட்கார்ந்து கொண்டு, தனது கடைக்கண் பார்வையால் ஒரு நொடியில் அந்த யெளவன புருஷரை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையில் பார்த்து, 'ச்ரி; நான் கேள்விப்பட்ட படிதான் இவருடைய தோற்றமும் இருக்கிறது' என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். அதுபோலவே சேரங்குளம் இனாம்தாரும் ஒரே பார்வையில் அவளது சர்வாங்கத்தையும் நோக்கி ஒவ்வோர் அழகையும் கண்டு களிகொண்டு