பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - வது அதிகாரம் தினசரி டைரி - செப்பிடு வித்தை செவ்வாய்க்கிழமை கழிய, புதன்கிழமை தினம் வந்து சேர்ந்தது. தஞ்சையில் வடக்கு ராஜவீதியிலுள்ள அற்புதமான தமது மாளிகையில் சயனித்திருந்த மருங்காபுரி ஜெமீந்தார் அன்றைய தினம் அதிகாலையிலேயே படுக்கையை விட்டு எழுந்து தமது காலைக் கடன்களை முடித்துக் கொண்டார். கொள்ளைக்காரனான கட்டாரித்தேவன் தமது தினசரி டைரிப் புஸ்தகத்தை தம்மிடம் சேர்ப்பதற்காக அன்றையதினம் முழுதும் தமது மாளிகையிலேயே இருக்கும் படி சொல் லி இருந்தான் ஆகையால், அந்த விஷயத்தில் தாம் செய்ய நினைத்திருந்த ஏற்பாடுகளையெல்லாம் சரியான காலத்தில் முடித்துவைத்துக்கொண்டு ஆயத்தமாக இருக்கும் பொருட்டே, அவர் அவ்வாறு அதிகாலையில் எழுந்தார். எழுந்தவர் தமது அந்தரங்க வேலைக்காரனான கோவிந்தசாமியை அழைத்தார். அவன் உடனே தோன்றி அவருக்கு அருகில் வந்து வணக்கமாக நின்றான். அவனுக்குச் சுமார் முப்பது வயது இருக்கலாம். அவன் மகா கூர்மையான புத்தியும், நாயக விசுவாசமும் உள்ளவன். அந்தக் கிழ ஜெமீந்தாரது சகலமான ரகசியங்களும், அந்தரங்க சமாசாரங்களும் அவன் ஒருவனுக்கு மாத்திரம் நன்றாகத் தெரியும். அவர் எப்படிப்பட்ட ரகசியமான காரியத்தை முடிக்கக் கருதினாலும் அவனிடத்திலேயே அதைத் தெரிவிப் பார். அவன் மிகவும் கவலையாகவும் சிரத்தையாகவும் அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பான். ஆனால், அவர் தன்னிடத்தில் நம்பிக்கையும் அந்தரங்க அபிமானமும் வைத்திருக்கிறார் என்பதைக் கருதி, அவன் தனது சுயேச்சைப்படி எதையும் செய்கிறவன் அல்ல. அவராக அழைத்து ஏதாவதொரு காரியம் ஆக வேண்டு மென்று சொன்னால் அன்றி, அவன் அவரிடத்தில் எதைப் .5.1-13