பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பூர்ணசந்திரோதயம்-1 ரமணியமான ஸ்தலத்தின் இனிமையை ஆயிரமடங்கு அதிகரிக்கச் செய்தனர். அவ்வாறு காணப்பட்ட இரண்டு பெண்மணிகளும் சகோதரி முறைமையுடையவர்கள். அவர்கள் தாய்தந்தை யற்றவர்களானாலும், தந்தையின் உடன்பிறந்தா ளான அத்தையினால் மிகுந்த வாத்சல்யத் தோடு வளர்த்துக் காப்பாற்றப்பட்டு வருகிறவர்கள். அந்த மடந்தையரின் தந்தை தஞ்சைபுரி அரண்மனையில், ராணுவத்தில் , காலாட்படை களுக்குத் தலைவராக இருந்து இங்கிலீஷ்காரரோடு நடத்தப் பட்ட ஒரு யுத்தத்தில் மாண்டுபோய் விட்டதாகவும், அதைக் கேட்டு அந்த விசனத்தைப் பொறாமல் அவரது மனைவியும் தேக அசெளக்கியமடைந்து ஐந்தாறு மாத காலத்தில் இறந்து போய்விட்டதாகவும், அப்போது குழந்தைகளாகவும் அநாதை களாகவும் இருந்த அந்த இரண்டு நங்கையரையும், அவர்களது அத்தையான நீல லோசனி அம்மாள் எடுத்து வந்து தனக்குச் சொந்தமான முன் விவரிக்கப்பட்ட மாளிகையில் வைத்து, தாயைக்காட்டிலும் பன்மடங்கு அதிகப் பகடிமாகவும், வாஞ்சையோடும் அவர்களை வளர்த்து வருவதாகவும், அந்த ஊரிலுள்ள எல்லோரும் அவர்களது வரலாற்றை அறிந்து கொண்டிருந்தனர். நீலலோசனி அம்மாள் வைதவி வியம் அடைந்தவள். அந்த அழகான சிறிய மாளிகையைத் தவிர, சொற்பமான ஆஸ்தியே நீலலோசனி அம்மாளுக்கு இருந்தமை யால், அவள் செட்டும் சிக்கனமுமாகக் குடித்தனம் செய்து அந்தப் பெண்மணிகள் இருவரையும் செல்வமாகவும் சிறப்பாக வும் காப்பாற்றி, அக்காலத்தில் பெண்டிர் கற்கத்தகுந்த கல்வியைப் புகட்டி, அவர்களை நற்குணநல்லொழுக்கங்களிற் பயிற்றி வந்தாள். அந்த மங்கையருள் மூத்தவளது பெயர் கமலம் அவள் சுமார் பதினேழு வயதடைந்தவள். இளையவளது பெயர் ஷண்முகவடிவு. அவள் பதினைந்து வயதடைந்தவள். அவர்களிருவரும் உயர்வான் ஆடையாபர ணங்களை அணிந்திரா விடினும், அவர்களுக்கு இணையான கட்டழகும் காந்தியும் வசீகரத்தன்மையும் வாய்ந்த பெண்