பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 197 வளாய், தனது முன்தானையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அதைக் கண்ட ஜெமீந்தாரும் தமது விசனத்தையும் மனவெழுச்சியையும் தாங்க மாட்டாமல் தத்தளித்தார். கரைகடந்து பொங்கிப் பெருகி அவரது கண்களில் இருந்து கண்ணிர்த் துளிகள் வழிந்தன. அவர் லீலாவதியை மறுபடியும் நோக்கி, 'அம்மா லீலாவதி நீ எப்படியாவது முயற்சி செய்து மறுபடியும் அதிசீக்கிரத்தில் இந்த ஊருக்குத் திரும்பி வந்துசேர். எனக்கும் வயசாகிவிட்டது. நீ என்னுடைய அரண்மனையில் இருக்கமுடியாவிட்டாலும், இந்த ஊரிற்குள்ளாவது நீ இருந்தால், அடிக்கடி நீ என்னைப் பார்க்கவும், நான் என்னால் இயன்ற உதவியை அப்போதைக்கு அப்போது உனக்குச் செய்யவும் அநுகூலமாக இருக்கும்' என்று மிகவும் உருக்கமாகவும் வாஞ்சையோடும் கூற, லீலாவதி அப்படியே முயற்சி செய்வதாக மறுமொழி கூற, அவரிடத்தில் செலவு பெற்றுக்கொண்டு வெல்வெட்டுமாடத்தைவிட்டுக் கீழே இறங்கித் தனது வண்டியில் ஏறிக் கொண்டு போய் விட்டாள். அவள் வந்து பிரிந்துபோனதனால் கிழவரது மனதில் ஏற்பட்ட கலக்கமும் சஞ்சலமும் ஒருவாறு அடங்கியசம்யத்தில் அவர் இருந்த வெல்வெட்டு மாடத்தின் முன் கதவைத் திறந்து கொண்டு அவரது தம்பியின் புத்திரனான கலியாணராமன் வந்து சேர்ந்தான். - அவனது முகம் சந்தோஷத்தையாவது உற்சாகத்தையாவது காட் டாமல், கற் சிலையின் முகம் போல, சலனமற்றதாக இருந்தது. அதைக் காண மருங்காபுரி ஜெமீந்தாரது முகமும் வாட்டம் அடைந்து சுருங்கியது. இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட காட்சி, மிகவும் விசனகரமான இழவைக் குறித்துத் துக்கம் விசாரிப்பதற்காக இருவர் சந்திக்கும் காட்சி போல இருந்தது. கலியாணராமன் என்ற யெளவன புருஷனுக்கு சுமார் இருபத்திரண்டு வயதிருக்கலாம். அவன் மிகவும் வசீகர