பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பூர்ணசந்திரோதயம்-1 நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நான் இன்னம் கால்மணி நேரத்தில் திரும்பி அங்கே போய்ச்சேராவிட்டால், அமர்க்களம் ஆகிவிடும். அதுவும் தவிர, கடைசியாக நானும் அண்ணனும் சண்டையிட்ட பிறகு அவருடைய முகத்தில் விழிக்க எனக்கு நிரம் பவும் வெட்கமாக இருக்கிறது. நான் அவரோடு பேசினாலும், அவர் என்னோடு பேசமாட் டார் என்றே நினைக்கிறேன். பிறகு நான் இன்றை யதினம் முழுதும் இங்கேயிருந்து அவரைச் சமாதானப்படுத்த நேரும். அதனால், எங்களுடைய பிரயாணம் தவங்கிப்போகும். ஆகையால், நான் இப்போது அண்ணன் வருவதற்கு முன்பாகவே போய்விட வேண்டும். இன்னொரு தடவை நான் வரும்போது அவரைப் பார்த்துச் சாவகாசமாக அவரோடு பேசிக்கொள்ளுகிறேன்' என்று நயமாகவும் இறைஞ்சிய குரலாகவும் கூறினாள். அதைக் கேட்ட ஜெமீந்தார் மிகுந்த விசனமும் ஏமாற்றமும் அடைந்தவராய், சரி; உன்னுடைய செளகரியம் போலச் செய். நீ ஏற்கெனவே பலவித இடுக் கண்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். என்னால் உனக்கு இன்னமும் அதிகமான துன்பமும் சஞ்சலமும் உண்டாகவேண்டாம். நீ இவ்விடத்தி லேயே இரு. நான் போய் பணம் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டுத் தமது ஆசனத்தை விட்டு எழுந்து, சற்று தூரத்திற்கு அப்பால் இருந்த இரும்புப் பெட்டியண்டைபோய் நூறு ரூபாய் நோட்டுகளில் ஐம்பது நோட்டுகளை எடுத்துக் கற்றையாய் கட்டிக்கொண்டு திரும்பி வந்து 'குழந்தாய்! இதோ ஐயாயிரம் ரூபாய் இருக்கிறது. இதைக் கொண்டுபோய், வீண் செலவு செய்யாமல், உனக்கே உபயோகப்படுத்திக் கொள் ” என்று அன்பாக மொழிந்த வண்ணம் அந்தக் கற்றையை லீலாவதியிடத்தில் கொடுக்க, அவள் தனது பெரிய தகப்பனாரது கரை கடந்த வாத்சல்யத்தை யும், அளவிறந்த தயாள குணத் தையும் கண்டு கலங்கிக் கண்ணிர் சொரிந்தவளாய், அதை வாங்கிக் கொண்டு தனது மனவெழுச்சியையும் அழுகையையும் அடக்க மாட்டாத