பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 195 ஊரிலேயே இருக்கப் போகிறீர்களா? அல்லது, இன்னமும் ஊர் ஊராக அலைந்து திரியப் போகிறீர்களா?' என்றார். லீலாவதி மிகுந்த கிலேசமும் துயரமும் அடைந்தவளாய் நாணித் தலை குனிந்து, 'பெரியப்பா நான் இன்னமும் ஒரு மணிநேரந்தான் இந்த ஊரில் இருப்பேன். அதற்குள் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று அவசரமாக வந்தேன். இன்றையதினம் புறப்பட்டுப் போனால் நான் திரும்பி வந்து உங்களைப் பார்க்க வருஷக் கணக்கில் பிடிக்கும்' என்று மிகுந்த விசனத்தோடு கூறினாள். அதைக் கேட்ட ஜெமீந்தார் கலக்கமும் சங்கடமும் அடைந்து, 'என்ன குழந்தாய்! நீ பேசுவது ஆச்சரியமாக இருக் கிறதே! இவ்வளவு காலம் கழித்து வந்தாய். இப் போது புறப்பட்டுப் போனால் திரும்பிவரவருஷக்கணக்கில் பிடிக்கும் என்கிறாய். அப்படி இருந்தும் என்னோடுகூட நாலைந்து நாளாவது சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகாமல் இப்படி அவசரப்பட்டுக் கொண்டு ஒடுகிறாயே. நீவராமலே இருப்பதை விட நீ வந்து இப்படிப் போவதனால் என் மனம் படும் வேதனை பிரமாதமாக இருக்கிறதே! நல்ல வேளையாக இன்றையதினம் ஒரு மணிக்கு உன்னுடைய அண்ணனும் இங்கே வருவதாகக் கடிதம் எழுதியனுப்பி இருக்கிறான். நீ அவனையும் பார்க்க வேண்டாமா? அவனும் நீயும் சண்டை யிட்டுப் பிரிந்தவர்களாக இருந்தாலும், அவன் உன்னோடு கூடப் பிறந்த அண்ணன் அல்லவா? வந்ததுதான் வந்தாய்; இன்றையதினம் முழுவதுமாக இருந்துவிட்டுப் போகலாகா தா?" என்று அன்பொழுகக் கூற, அதைக் கேட்ட லீலாவதி பணிவாகவும் மரியாதையாகவும் பேசத் தொடங்கி, "இல்லை பெரியப்பா இன்று பகல் ஒன்றரை மணிக்கு இந்த ஊரிலிருந்து நாங்கள் புறப் படவேண்டும் என்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. என்ன செய்கிறது? ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டபிறகு, அவர் சொல்லுகிறபடிதானே நான்