பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i84 பூர்ணசந்திரோதயம்-1 கூடாது. அவனுக்கு நான் எவ்வித உதவியும் செய்யமுடியாது. நீ சம்பந்தப்படுகிற வரையில் உனக்கு என்னவேண்டுமோ அதை மாத்திரம் தெரிவி' என்றார். அதைக்கேட்ட லீலாவதி மேலும் இரண்டொரு நிமிஷ நேரம் அஞ்சித் தயங்கி, "நான் கேட்கப்போகும் உதவி, எனக்காகவே அன்றி வேறே எவருக்காகவும் இல்லை' என்றாள். ஜெமீந்தார், "அப்படியானால் நீ தைரியமாகக் கேட்கலாம். உனக்காக என்னுடைய உயிரை வேண்டுமானாலும் நான் கொடுக்கத் தயார். நீ வெட்கப்படாமல் சொல்லலாம்' என்று வற்புறுத்திக் கேட்க, லீலாவதி, "எனக்கு இப்போது கொஞ்சம் பணம்தான் வேண்டும். வேறே எந்த உதவியும் எனக்கு வேண்டாம்' என்றாள். அதைக்கேட்ட ஜெமீந்தார் கண் கலக்கம் அடைந்தவராய் அன்பாக அவளை நோக்கி, 'அதுதான் கேட்பாய் என்று நானும் நினைத்தேன். ஆனால், இன்னொரு விஷயம். நீ பணத்தை வாங்கிக் கொண்டு போய் அந்த மனிதனிடத்தில் கொடுப்பாய்; அவன் சூதாட்டத்திலும் மற்ற துன்மார்க்கங் களிலும் செலவிட் டு எல்லாவற்றையும் விரயம் செய்து விடுவான். அப்படிச் செய்வதாக இருந்தால், அது என் மனசுக்குக் கொஞ்சமும் சகிக்காது' என்றார். லீலாவதி, 'அப் படியெல்லாம் நடக்காது. தாங்கள் கொடுக்கும் பணத்தை நான் எனக்கே உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன். என் வார்த்தையைத் தாங்கள் நிச்சயமாக நம்பலாம்' என்று உருக்கமாக மொழிந்தாள். அதைக் கேட்ட ஜெமீந்தார் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்து, "சரி, அப்படியானால் உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ, அதை நான் தருகிறேன். நீ போகும்போது அதை வாங்கிக் கொண்டு போகலாம். இனிமேலாவது நீங்கள் இந்த