பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 193 அவர் மிகவும் உருக்கமாக அவளைப் பார்த்து, 'லீலாவதி! இப்போதாவது வந்தாயே! நிரம்பவும் சந்தோஷமாயிற்று. ஆகா! உன்னைப் பார்த்து எத்தனை வருஷ காலம் ஆகிறது முழுதும் புது மனுஷியாக அல்லவா நீ மாறிப்போயிருக்கிறாய். நீ நல்ல ராஜாத்தி போல இருப்பதைக் கண்டு உன்னை நான் தக்க இடத்தில் கொடுத்து நல்ல செல்வத்திலும் செல்வாக்கிலும் வைக்க நினைத்ததை எல்லாம் நீ கெடுத்துக் கொண்டாய். இப்போதும் உன்னைப் பார்த்தால் ஒரு சக்கரவர்த்தினி போலவே இருக்கிறாய். இவ்வளவு உன்னதமாக இருக்கும் நீ எவனோ ஒரு பரம ஏழையைக் கட்டிக்கொண்டு தவிக்கிறாய். உன்னுடைய முகம் பெருத்த விசனத்தைக் காட்டுகிறது. நீதக்க இடத்தில் கலியாணம் செய்து கொண்டிருந்தால், உன் முகம் கோண, அந்தப் புருஷன் பார்த்துச் சகித்திருப்பானா? நடந்த விஷயங்களைப் பற்றி இனிப் பேசுவதில் பயன் என்ன? அது போகட்டும். உன்னுடைய முகம் மிகவும் துக்ககரமாக இருக்கிறதே! என்ன சமாசாரம்? நீ எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பது என்னுடைய ஆசை. உனக்கு எவ்விதமான இடர் ஏற்பட்டது? அதை வெளியிடு; என்னால் ஆகக்கூடிய உதவியை எல்லாம் நான் செய்து, உன்னைச் சந்தோஷிப்பிக்கிறேன்' என்றார். மிகவும் அந்தரங்கமான அன்போடு பேசப்பட்ட அவரது சொற்களைக்கேட்ட லீலாவதியின் கண்கள் கலங்கின. தான் என்ன மறுமொழி சொல்வது என்பதை உணராமல் அவள் வெட்கிக் கீழே குனிந்தவளாய் சிறிதுநேரம் இருக்க, அதைக் கண்ட ஜெமீந்தார், "அம்மா லீலாவதி என்னிடத்தில் கூட லஜ் ஜைப் படுகிறாயே! என்னால் உனக்கு எவ்விதமான உதவி தேவையானாலும் அதை நீ சொல்லத் தடை என்ன? ஏதோ முக்கியமான விஷயத்தைப்பற்றி என்னிடத்தில் பேச வேண்டும் என்று நீ உன் கடிதத்தில் எழுதியிருந்தாயே. அது என்ன விஷயம்? ஆனால், அந்த ஒரு மனிதனைப் பற்றிய விஷயத்தை மாத்திரம் நீ என்னிடத்தில் பிரஸ்தாபிக்கவே ఫ్రీ.,i-14