பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 - பூர்ணசந்திரோதயம்-1 நிற்காது. அவர் ஒருத்தியோடு ஒருநாள் பழகுவாரானால், மறுநாள் அவள் அவருக்கு வேப்பங்காய் போல ஆகிவிடுவாள். அவர் அப்படிப்பட்ட அற்ப சித்தமுடையவர். ஆனாலும், தமது தம்பியின் மகளான லீலாவதியிடத்தில் மாத்திரம் ஆழ்ந்த வாத்சல் யமும் என்றைக்கும் மாறாத உறுதியான பற்றும் இருந்து வந்தன. அவளது அண்ணனான கலியாணராமனை அவர் விஷம் போல வெறுத்தார். ஆனால், லீலாவதியின் விஷயத்திலோ அவர் குழந்தைப் பருவத்திலிருந்து அவளிடத்தில் ஆழ்ந்த பிரியம் வைத்து அவளை அருமையாக வளர்த்து வந்தார். ஆனால், அவள் புஷ் பவதியாகிச் சில வருஷகாலத்தில் அவர் விரும்பாத ஒரு புருஷனைக் காதலித்து, கிழவருக்குத் தெரியாமல், அந்தக் காதலனது வீட்டிற்குப் போய்விட்டாள். கிழவர் அவளுக்கு எவ்வளவு தூரம் புத்திமதி சொல்லியும் கேளாமல், அவள் அந்தக் காதலனையே மணந்து கொண்டாள். அதன்பிறகு சில காலம் வரையில், அவர் அவளைத் தமது ஆயுட்கால பரியந்தம் பார்ப்பதில்லை என்றும், அந்தக் கலியாணத்தைச் சரியான கலியாணமாக ஒப்புக்கொள்வதில்லை என்றும் அவளது கணவனோடு பேசுவதில்லை என்றும் உறுதி செய்துகொண்டார். ஆனால், வருஷம் செல்லச் செல்ல அவரது உறுதி தளர்ந்து கொண்டேவர, அவரது இயற்கை வாத்சல்யம் திரும்பிப் பொங்கி யெழுந்து அவரை வதைத்துக் கொண்டே இருந்தது. அந்தக் கலியானத்தின் பிறகு அவள் தனது கண்வனோடு வெளியூர் களுக்குப் போயிருந்ததாக, அவர் கேள்வியுற்றிருந்ததன்றி, எப்படியாவது அவளை மறுபடியும் தாம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். அவ்வாறு அவரை விட்டுப் பிரிந்து போன லீலாவதி தானாகவே இப்போது திரும்பி வந்தாள். ஆகையால், அவளைக் காண்பது அவருக்குப் பரமாநந்த சுகமாக இருந்தது. ஆதிகாலத்தில் அவர் அவளிடத்தில் கொண்டிருந்த அளவில் அடங்காத அன்பும் உருக்கமும் ஒரே நொடியில் ஆற்று வெள்ளம்போலப் பொங்கித் திரும்பின.