பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பூர்ணசந்திரோதயம்-1 போகுமா? அவர் முன்போல எப்போதும் என்னிடத்திலேயே இருக்க வேண்டாம். ஒரு மாசத்துக்கு இரண்டொரு நாளாவது என்னுடைய ஜாகைக்கு வந்து அவர் என்னிடத்தில் சந்தோஷமாக ஒரு பேச்சுப் பேசிவிட்டுப் போனால், அதுவே எனக்குக் கனகாபிஷேகம் செய்ததுபோல இருக்கும். அப்போது பார்ப்பவர் என்னை எப்போதும் போல கண்ணியமாக மதிப்பர். இப்போது என்னைப் பார்த்து எல்லோரும் ஏளனமல்லவா செய்கிறார்கள்; அதுபோகட்டும். எனக்கும் இளவரசருக்கும் உள்ள மனஸ்தாபங்களை எல்லாம் சொல்லித் தங்களுடைய சந்தோஷத்தை நான் இப்போது கெடுப்பது சரியல்ல. அது எப்படியாவது போகட்டும். முறிந்துபோன பால் இனிமேல் ஒன்றாகச் சேரப் போகிறதில்லை. நான் தங்களிடத்தில் வந்த காரியத்தைவிட்டு நான் வேறே எதையோ பேசி உங்களை வருத்துகிறேன். நான் வந்தது தங்களிடத்தில் ஓர் உபகாரம் பெறவல்லவா?” என்றாள். அதைக் கேட்ட ஜெமீந்தார், 'என்னவிதமான உதவி வேண்டும்?' என்றார். அம்மணிபாயி, "என்னவிதமான உதவியென்று கேட்பதை விட நீ கேட்பதைக் கொடுத்துவிட்டேன் என்றே தாங்கள் சொல்லியிருக்க வேண்டும் ' என்று மிகவும் நயமாகவும் கொஞ்சலாகவும் பேசினாள். ஜெமீந்தார், "சரி, அப்படியே கொடுத்துவிட்டேன்' என்று மகிழ்ச்சியோடு சிரித்துக்கொண்டு மறுமொழி கூறினார். அம்மணிபாயி, வேறொன்றும் இல்லை. இதற்குமுன் அன்றைய தினம் தாங்கள் ஒர் ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தீர்கள். அதை நான் திருப்பிக் கொடுக்க நாள் ஆகி விட்டது. அப்படி இருந்தும் நான் மறுபடியும் தங்களிடம் கொஞ்சம் பணம் கடன் கேட்கும் படியான சந்தர்ப்பம்