பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 243 விலக்கலாம்; இல்லாவிட்டாலும் இல்லை. ஆகையால், இந்த உலக வாழ்வில் எதுவும் நிலைத்ததல்ல. இந்த நிமிஷத்தில் சந்தோஷமிருக்கும்; அடுத்த நிமிஷத்தில் அது 'பரம துக்கமாக முடியும். ஆகையால், எதைப் பற்றியும் சந்தோஷமாவது விசனமாவது கொள்ளாமல் சும்மா இருப்பதே பரம சுகம். நான் பேசும் வேதாந்தத்தைக் கேட்டுக்கொண்டே நீ மெய்ம்மறந்து, வழி தவறி முன்போல எங்கேயாவது பயிருக்குள் நுழைந்துவிடப் போகிறாய். எனக்குப் பக்கத்திலேயே நடந்துவா' என்று கூறியவண்ணம் முன்னால் நடந்தார். ஷண்முகவடிவு நன்றாகப் படித்து உலக தத்துவங்களை யெல்லாம் சரியாக ஆராய்ச்சி செய்து பழகிய மனதையுடைய மேதையாகையால், அந்தப் பண்டாரம் கூறிய நியாயம் அவளது மனதிற்குத் திருப்திகரமாகத் தோன்றவில்லை. இருந்தாலும், தான் அவரிடத்தில் அந்த விஷயத்தில் அதிகமாகத் தர்க்கவாதம் செய்வது மரியாதை யல்லவென்றும், அவர் உலகைத் துறந்த சந்நியாசியாதலால், அவ்வாறு விரக்தியாகவும், நன்மை தீமைகளிடத்தில் சமநோக்கமாகவும் பேசுகிறார் என்றும் நினைத்து அந்த விஷயத்தை அவ்வளவோடு நிறுத்தி, அவரை நோக்கிப் பணிவாகப் பேசத் தொடங்கி, 'ஆம்; ஆம்; இந்த விஷயங்களில் சுவாமிகளுக்குத் தெரியாததற்கு நான் என்ன சொல்லப் போகிறேன், ஒன்றுமில்லை. அதிருக்கட்டும்; நாம் நிரம்பதுாரம் வந்துவிட்ட மாதிரி இருக்கிறதே! தங்களுடைய மடம் இன்னம் அதிக தூரத்தில் இருக்குமா, கிட்டவே இருக்கிறதா? இந்த இருளைப் பார்த்தால், மணி எட்டுக்குமேல் ஆகியிருக்கும் போலத் தோன்றுகிறது. என்னுடைய அத்தையின் கதி எப்படி முடிந்ததோ தெரியவில்லை. வேலைக்காரி அவ்வளவு சமர்த்தியல்ல. அவள் பங்களாவில் தனியா இருக்க பயப்படுவாள். அவள் என்ன செய்கிறாளோ என்னவோ தெரிய வில்லை. என்னுடைய உயிரும் நினைவும் பங்களாவிலேயே இருக்கிறது. இனித் தாங்கள் பெரிய பண்ணைப் பிள்ளையை