பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பூர்ணசந்திரோதயம்-1 எப்போது காண்கிறது? அவர்கள் ஆள் அனுப்ப, நான் எப்போது என்னுடைய ஜாகைக்குப் போய்ச் சேரப் போகிறேனோ தெரியவில்லையே!” என்றாள். அதைக்கேட்ட பண்டாரம், “குழந்தாய்! கவலைப்படாதே; என்னுடைய மடம் அதோ எதிரில் தெரிகிறது பார். அந்த மடத்துக் குப் பக்கத்திலேயே ஊரும், பெரிய பண்ணைப் பிள்ளையின் இருப்பிடமும் இருக்கின்றன. நான் ஒரு நிமிஷத்தில் அவரை அழைத்துக்கொண்டு வருகிறேன். அவருக்கு நல்ல பெட்டி வண்டி ஒன்று இருக்கிறது. அவர் உன்னை அதில் வைத்து இன்னம் அரை நாழிகைக்குள் உன்னை உன்னுடைய ஜாகையில் பத்திரமாகக் கொண்டுபோய் ச் சேர்த்துவிடச் செய்வார். ஆகையால், உனக்கு எவ்விதமான யோசனையும் வேண்டியதே இல்லை. நாம் என்றைக்கும் இல்லாத அபாயத்தில் மாட்டிக் கொண்டோம். அதிலிருந்து ஜாக்கிரதையாகவும் கெடுதல் இல்லாமலும் சரியானபடி தப்பிப் போக வேண்டாமா? கொஞ்சம் காலதாமசம் ஆவதைப் பற்றி வருத்தப்பட்டால், முதலுக்கு அல்லவா மோசம் வந்துவிடும். இந்தத் திருடர்களால் உனக்கு இன்றைய தினம் உயிருக்கு ஹானி நேர்ந்திருந்தால் அப்போது அந்த வேலைக்காரி என்ன செய்வாள்? வீணாக அவரசப்படாதே அம்மா! உனக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு நான் பாடுபடுகிறேனே அல்லாமல், உன்னுடைய வேலைக்காரிக் காவது அத்தைக்காவது அநாவசியமான அசெளகரியம் உண்டாக்க வேண்டும் என்று எனக்கு ஆசையில்லை. சுவரை வைத்துக் கொண்டு தானே சித்திரம் எழுதவேண்டும். நீ இன்றைய தினம் பத்திரமாக உன்னுடைய ஜாகைக்குப்போய்ச் சேர்ந்தால் தானே, உன்னுடைய அத்தையை எப்போதும் காப்பாற்ற அநுகூலமாக இருக்கும்" என்று கூறினார். அவர் சொன்ன சொற்கள் ஈட்டிகள் கொண்டு குத்துவதுபோல இருந்தன. ஆனாலும், அவர் தேனைச் சொட்ட விடுவதுபோல அந்த வார்த்தைகளை மிகவும் நயமாகவும் இன்பகரமாகவும் கூறி முடித்தார்.