பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பூர்ணசந்திரோதயம்-1 வாசற் பக்கம் செலுத்த, கன்னங்கரேலென இருளே மயமாக நிறைந்து மகா பயங்கரமாக இருந்தது.கண் கண்டதுரம் வரையில் மரங்களும் காடுகளும் ஒரே வனமாக நிறைந்திருந்ததைக் காண, அவளது நெஞ்சு திடுக்கிட்டது. உடம்பு கிடுகிடென்று ஆடியது. முடிமுதல் அடி வரையில் உரோமம் சிலிர்க்க, மயிர்க்காலிற்கு மயிர்க்கால் அக்கினிக் குழம்புபோல வியர்வை வெள்ளம் பெருகியது. பண்டாரம் திரும்பி வரவில்லையே என்றும், அவருக்கும் அந்த இருளில் ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோ என்றும், தான் அப்படிப்பட்ட வனத்தைக் கடந்து அந்த மகா பயங்கரமான இரவில் எப்படித் தனது வீட்டிற்குப் போய் ச் சேருகிறது என்றும் கவலைக் கொண்டவளாய், அந்த நற் குண மங்கை தவித்து நின்று, தான் வாசற் கதவைத் திறந்துகொண்டு வெளியில்போய்ப் பார்க்கலாமா என்று நினைத்தாள். கள்கடை யண்டையில் தன்னை மறித்து வருத்திய குடியர்களோ, அல்லது வேறு திருடரோ வெளியிலிருந்து தனக்கு மறுபடியும் பொல் லாங்கு இழைத்தால் தான் என்ன செய்கிறது என்ற அச்சத்தினால், அவள் பின் வாங்கினாள். தனது உடம்பில் சொற்ப விலையுள்ள ஏதோ இரண்டடொரு ஆபரணங்களே இருந்தது. ஆனாலும், விலை மதிப் பற்ற ஆபரணமான தனது கற்பிற்கு அபாயம் நேராமல் காப்பாற்றிக்கொள்வதே தனது முதற்கடமை என்ற நினைவைக் கொண்டவளாய், அவள் கதவைத் திறக்க வேண்டும் என்ற அவாவை அடக்கிக் கொண்டவளாய், பண்டாரம் திரும்பி வருகிற வரையில் தான் பொறுமையாக அவ்விடத்தில் காத்திருப்பதைத் தவிர, தான் செய்யக்கூடியது வேறு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தவளாய் உட்புறத்திலேயே இருந்தாள். பொழுது ஏற ஏற அவளுக்கு அவ்விடத்தில் இருக்கையே கொள்ளவில்லை. அவள் சிறிது நேரம் உட்காருவதும், சிறிது நேரம் நடப்பதுமாக இருக்க, அப்போது அவளது மனதில் ஒர் எண்ணம் தோன்றியது. பண்டாரம் வெளியிற் போகுமுன், சொன்ன ஒரு விஷயம்