பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 11 அதுவரையில் நாற்காலியில் உல் லாஸ்மாகச் சாய்ந்து உடம்பிற்கு உழைப்பே கொடுக்காமல் மெலுக்காக இருந்துவந்த அந்த வடிவழகியின் தேகத்தில் அப்போது ஒருவிதமான புதிய ஊக்கமும், உற்சாகமும் பரபரப்பும் காணப்பட்டன. ஏனென்றால், அந்தக் காலத்தில் தஞ்சைமாநகரம் அரசனது வாசஸ்தலமாக இருந்தது. ஆகையால், அதில் பிரம் மாண்ட மான அரண்மனையும், மாட கூடங்களும், தேவாலயங்களும், தடாகங்களும் ஏராளமாக நிறைந்து மிக உன்னதமான பட்டன மாக இருந்ததென்பது பற்றி, கிராமவாசிகள் எல்லோரும் அந்த ராஜதானிக்குப் போய்ப் பார்ப்பதை ஒரு பெருத்த பாக்கியமாக மதித்து வந்தனர். அதுவும் தவிர, அந்த மடந்தையரின் அத்தை தஞ்சை நகரத்தின் சிறப்பைப் பற்றி அபாரமாகப் புகழ்ந்து எப்போதும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டிருந்ததனால் உண்டாகிப் பெருகிக்கொண்டே வந்திருந்த ஆசையும் ஆவலும் அப்போது மும்முரமாக எழுந்து அவளது மனதில் கட்டுக்கடங்காத உற்சாகத்தையும் மனவெழுச்சியையும் உண்டாக்கின. ஆகையால் கமலம் அன்றைய இரவு தனது இமைகளையே மூடாமல் மிகுந்த ஆவலோடு படுத்திருந்தாள். விடியற்காலம் சரியாக ஐந்து மணிக்குத் தபால் வண்டிகள் அவர்களது பங்களாவின் வாசலில் வந்து நின்றன. வண்டிக்காரன் ஒருவன் கதவைத் தட்டி அவர்களை அழைக்க, கமலம், ஷண்முகவடிவு, வேலைக்காரி ஆகிய மூவரும் உடனே எழுந்தனர். கமலத்தின் உடைகளும், சில சிற்றுண்டிகளும் அடங்கிய ஒரு சிறிய மூட்டையை வேலைக்காரி தனது கரத்தில் எடுத்துக்கொண்டு முன்னாக வண்டியண்டை சென்றாள். கமலம் புறப்பட்டுப் போகும் அவசரத்தில் தனது தங்கையை நோக்கி, 'அம்மா வீட்டையும் அத்தையையும் பத்திரமாகப் பார்த்துக்கொள். நான் போய்விட்டு அதிசீக்கிரத்தில் வந்து சேருகிறேன்' என்று திடமாகவும் துணிவோடும் கூறினாள். ஆனால், ஷண்முகவடிவின் மனதும் கண்களும் கலங்கின. தனது