பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பூர்ணசந்திரோதயம்-1 தொடர்ந்துபோய், அவளைப் பலாத்காரம் செய்தால், அவள் கூச்சலிடுவாள் என்றும், ஜனங்கள் வந்து கூடிவிடுவார்கள் என்றும் நினைத்து ஒருவித அச்சங்கொண்ட பாளையக்காரர், அப்படியே நின்றவராய்ச் சிறிது தூரத்திலிருந்து பஞ்சண்ணாராவைப் பார்த்து, 'பஞ்சண்ணா! வா அப்பா, நல்ல சமயத்தில் வந்தாய். சமயசஞ்சீவி என்றால் உனக்கே தகும். உன்னைக் கண்டு பேசவேண்டுமென்று நான் இப்போதுதான் நினைத்தேன். நீ உடனே எதிரில் வந்து நிற்கிறாய்! என்ன அப்பா! வெகுகாலமாக நீ கண்ணிலேயே படவில்லையே! இந்த ஊரிலேதான் இருக்கிறாயா? அல்லது வேறே ஏதாவது ஊருக்குப் போயிருந்தாயா?" என்று மிகவும் பிரியமாகவும் சந்தோஷத்தோடும் பேசினார். அதைக் கேட்ட பஞ்சண்ணாராவ், வாலையாட்டிக்கொண்டு நிற்கும் நாய்க்குட்டிபோல, அவருக்கு எதிரில் வந்து கூழைக்கும்பிடு போட்டுப் பல்லிளித்து ஆஜாதுபாகுவானதனது உடம்பை விகாரமாக வளைத்து வணக்கமாக நின்று, 'எஜமான் கோபிக்கக்கூடாது; மரங்களின் மறைவில் நான் வந்தபொழுது இங்கே இரண்டுபேர் சச்சரவு செய்துகொண்ட பேச்சுக் குரல் கேட்டது. எவனோ துஷ் டன், தனியாக வந்து அகப்பட்டுக் கொண்ட யாரோ ஒரு பெண்பிள்ளையைப் பலாத்காரம் செய்கிறான் என்று நினைத்து நான் இங்கே வந்துவிட்டேன். இங்கே இருப்பது எஜமான் என்பது தெரிந்திருந்தால், நான் இங்கே வந்தே இருக்கமாட்டேன். எஜமானுடைய காரியம் இந்நேரம் பலிதமாகி இருக்கும். அதற்கு இடைஞ்சலாக நான் வந்து சேர்ந்தேன். தெரியாத் தனத்தினால் நடந்த இந்தப் பெருத்த பிழையை எஜமான் rமித்துக்கொள்ள வேண்டும். இந்த நாய்க்குட்டி எப்போதும் எஜமானுடைய வீட்டுச் சோற்றைத் தின்று வளர்ந்தது. இப்போதும் எஜமானுக்கு இந்த நாய்க் குட்டியால் என்ன காரியம் ஆகவேண்டுமானாலும், செய்யக் காத்திருக்கிறது; கொஞ்ச காலமாக நான் எஜமானு