பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பூர்ணசந்திரோதயம்-1 மதித்துத் தனது மாளிகைக்கே வந்திருக்கையில், தான்.அவர்களது வேண்டுகோளை மறுப்பது மரியாதை ஆகாதென நினைத்தவளாய், அந்தப் பெண்பாவை தனது வேலைக்காரியை நோக்கி, "சரி, அவர்கள் பெரிய இடத்திலிருந்து வந்திருக்கிறார்கள். நீயும் கூட இருந்து தக்கபடி அவர்களை உபசரித்து மரியாதையாக அழைத்துக் கொண்டுவா!' என்று கூறி அவளை வெளியில் அனுப்பிவிட்டு, தனது ஆடையா பரணங்களை யெல்லாம் சீர்திருத்திக்கொண்டு நிலைக் கண்ணாடிக்கு எதிரில் போய் நின்று தனது தோற்றம் கம்பீரமாக இருக்கிறதா என்று பார்த்துத் திருப்தி அடைந்தவளாய், வாசல் படியண்டை போய் அந்தச் சீமாட்டியை எதிர் கொள்வதற்கு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தாள். அவளது மனதில் பலவகையான அச்சமும் கவலையும் சஞ்சலமும் எழுந்து புண்படுத்தினவானாலும், அதனால் தனது முகத்தில் ஏற்பட்ட சலனக் குறிகளையெல்லாம் மறைத்து, தான் மிகுந்த குதுகலமும் ஆனந்தமும் பெருமைப்பாடும் அடைந்தவள் போலக் காட்டி அப்போதே மலர்ந்த தாமரைப் புஷ்பம்போலத் தனது முகார விந்தத்தில் புன்னகை உண்டாக்கிக் கொண்டு நின்றாள். தான் அந்தப் பெருமாட்டியினிடத்தில் சம்பாவித்துக் கொண்டிருக்கையில், தான் அதற்குமுன் எதிர்பார்த்திருந்த மனிதர் வந்து, தன்னோடு பேச சந்தர்ப்பம் சரியாக இல்லையென்று நினைத்து, ஏமாற்ற மடைந்து திரும்பிப்போய் விடுவாரோ என்ற நினைவினால் அவளது மனமும் திரேகமும் பதறிக்கொண்டிருந்தன. அப்போது வரப்போகும் சீமாட்டி த்ார்வார் தேசத்தின் விவரங்களைப் பற்றி ஏதேனும் பேசஆரம்பித்தால், தான் என்ன மறுமொழி சொல்லி, எப்படித் தப்புகிறது என்ற கவலையே பெருத்த கவலையாக எழுந்து அந்த அணங்கை வதைத்துக் கொண்டிருந்தது. அவ்வாறு அந்த மடந்தை எண்ணமிட்டிருந்த காலத்தில், 'இப்படி வாருங்கள்; இதோ இருக்கிறார்கள்' என்று