பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19 எதிர்பாராத அந்தப் புதிய துன்பத்தைக் கண்டு மிகுந்த பதைப்பும், சஞ்சலமுமடைந்து பைத்தியம் கொண்டவள் போல மாறித் தன்னை மறந்து, அந்த முரட்டு மனிதர்கள் போன இடத்தை நோக்கி ஒட்டமாக நடக்கலானாள். அவ்வாறு, அவள் சிறிது தூரம் சென்று நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அந்த முரட்டு மனிதர்களுள் ஒருவனாகிலும் காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் தெருக்களும் சந்துகளும் தாறுமாறாகச் சென்று கொண்டிருந்தமையால், அப்படிப்பட்ட பெருத்த பட்டணத்தில்,தான் அந்த முரட்டு மனிதர்களைக் கண்டுபிடிப்பது பலியாக் காரியமென உணர்ந்த கமலமென்னும் அந்த வடிவழகி மனமாழ்கி ஓய்ந்து தளர்ந்து ஸ்தம்பித்து சித்திரப் பதுமை போலவும், தோகை மயில் போலவும் அப்படியே சிறிது நேரம் நின்றாள். அந்த நிலைமையில் அவ்விடத்தில் வந்த ஒரு வண்டி அவளுக்கு அருகில் நிறுத்தப்பட்டது. அந்த வண்டிக்குள் இருந்த ஒரு ஸ்திரீ கமலத்தை நோக்கி, 'யாரம்மா நீ? நிரம்பவும் விசனமாக நிற்கிறாயே! என்ன விசேஷம் ? என்று மிகவும் அன்பாக வினவினாள். அந்த ஸ்திரீக்கு நாற்பது வயதிற்கு உள்ளாகவே இருக்கலாம். அவள் உயர்ந்த ஆடையாபர ணங்களை அணிந்துகொண்டு தக்க பெரிய மனிதர் வீட்டுப் பெண் பிள்ளைபோலக் காணப்பட்டாள். அவளது குரலின் நயத்திலிருந்து அவள் உண்மையாகவே அநுதாபமும் இரக்கமும் கொண்டு பேசுகிறாள் என்பதை உணர்ந்த கமலம் தனது வரலாற்றையெல்லாம் சவிஸ்தாரமாகத் தெரிவித்தாள். அவள் மறைக்காமல் எல்லா விவரத்தையும் அவ்வாறு சொன்னதன் மேல், அவளுக்கு இன்னமும் ஏதேனும் துன்பம் நேர்ந்ததா, அல்லது அநுகூலம் ஏற்பட்டதா என்பதும், அங்கே வண்டியில் வந்தவள் எப்படிப்பட்ட மனுவி என்பதும் இப்போது சொல்லத்தகாத ரகசிய விஷயங்களாதலால், இவ்வளவோடு நிறுத்தி வேறொரு விநோத சம்பவத்தை வெளியிடுவோம்.