பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27 அடுத்த நிமிஷத்தில் அந்த அழகிய ஸ்திரீ விளக்கைக் கொளுத்திப் பிடித்துக்கொண்டு தூக்கத்திலிருந்து அப்போதே விழித்துக்கொண்டு எழுபவள் போல, "ஆ யார்அது? நீங்களா! இதோ வந்தேன்' என்று குரல் கொடுத்தவண்ணம் தனது இமைகளால் அரைப்பாகம் கண்களை மூடிக் கொண்டு அப்போதும்துக்கக் கலக்கத்தில் இருப்பவள் போலப் பாசாங்கு செய்தபடி கதவைத் திறந்து விட்டாள். அவன் தனது செய்கை யைக் கண்டுகொண்டிருப்பானோ என்ற திகிலினால் அந்த நிமிஷ நேரமும் அவளுக்குப் பெருத்த நரக வேதனையாக இருந்தது. தன் கணவனது முகத்தைப் பார்க்க அவளது கண்கள் கூசினவானாலும், அவள் கடைக்கண் பார்வையால் அவரது முகத்தைக் கபடமாக நோக்கினாள். அந்த முகம் மிகுந்த கலக்கத்தையும், ஆத்திரத்தையும் பதைப்பையும் காண்பித்தது. அதைக் கண்ட அந்த ஸ்திரீயின் நெஞ்சு திடுக்கிட்டது. தேகம் கிடுகிடென்று ஆடுகிறது; வாய் குழறுகிறது; தூக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருந்துகிறவள்போல் அவள் ஜாலம் செய்து நடிக்க, உடனே அந்த மனிதர் சொன்ன சில வார்த்தைகளிலிருந்து தங்களுடைய காரியத்தை அவர் கண்டு கொள்ளவில்லை யென்று யூகித்துக்கொண்டாள். உடனே அவளுக்கு ஒருவிதத் துணிவும் பேசும்படியான தைரியமும் பிறந்தன. அவள் அப்போதும் அவரை நேருக்குநேர் பாராமல் விளக்கைப் பார்த்தபடியே இருந்து, "திரும்பி வர இரண்டு தினம் ஆகுமென்று சொன்னிர்களே, சிநேகிதர்கள் விருந்து நடத்த வில்லையா?’ என்று நயமாகக் கேட்டாள். அந்தச் சயன மாளிகையின் கதவை மூடி உட்புறத்தில் தாளிடாமல் வைத்துவிட்டு அவளைத் தொடர்ந்து வந்த அவளது புருஷர், 'பெண்ணே பயப்படாதே; இன்றைய தினம் விருந்துக்குத்தான் போயிருந்தேன். அங்கே மிகவும் விபரீதமான ஒரு காரியம் நடந்துபோய்விட்டது. அதனால் நான் புறப்பட்டு உடனே வந்துவிட்டேன். நாம் இப்போதே இந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுப் போய்விட வேண்டும். பொழுது விடிவதற்குள்,