பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 35 ஜெமீந்தார் பதவியிலுள்ளவர்கள் அரசருக்கு அடுத்தபடியாக மதிக்கப்பட்டு வந்தார்கள்; மற்றவர்கள் எல்லோரும் மிட்டாதார், பாளையக்காரர், இனாம்தார், மிராசுதார் என்பவர் வரிசையான ஏற்றத்தாழ்வை உடையவர்கள்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏராளமான கிராமங்கள் ஏகபோகமாக விடப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து மலைமலையாக நெல் முதலிய தானியங்களும், பணக்குவியல்களும், மற்ற சகலமான சாமான்கள் காய்கறி பழவகைகள் யாவும் வந்து ஒவ்வொருவரது மாளிகையிலும் குவிந்து கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மகாராஜன் போலத் தமக்குள் ஆயிரக்கணக்கான சிப் பந்திகள் முதலிய ஆடம்பரங்களை எல்லாம் வைத்துக் கொண்டிருந்தனர். அரசன் முதல் சகலமானவர்களுக்கும் தாலிகட்டின மனைவியைத் தவிர எண்ணிறந்த தாசிகளும் வேசைகளும் இருந்து வந்தனர். இராக்காலங்களில் எங்கு பார்த்தாலும் கேளிக்கைகளும், பாட்டுக் கச்சேரிகளும், கூத்துகளும், பண்டிகைகளும், விருந்துகளுமே மயமாக நடத்தப்பட்டன. இந்தக்கதை தொடங்கிய காலத்தில் இருந்த அரசர் கிழவராதலால் அவரது புத்திரரான இளவரசர் சதாகாலமும் சந்தோஷ புருஷராகவும், சித்திரசேன கந்தருவனைப் போல, எப்போதும் எண்ணிறந்த யெளவனப் பாவையருக்குள் புதைபட்டே இருப்பதில் மிகுந்த பிரேமை கொண்டவராகவும் இருந்தார். அந்த ஊரிலிருந்த ஜெமீந்தார்கள் முதலிய எல்லோரும் அவரை அடிக்கடி அழைத்துப் போய்த் தங்களது மாளிகைகளுக்குள் வைத்துக் கொண்டு அவருக்காகப் பிரமாதமான விருந்துகளை நடத்தி, ஒருத்தியைவிட ஒருத்தி விசேஷமான அழகுடையவளாகப் பார்த்து, புதிய புதிய தாசிகளைக் கொணர்ந்து கேளிக்கை பாட்டுக் கச்சேரி முதலியவைகளை நடத்தி அவரை மகிழ்விக்க முயலுவார்கள். ஆனால், அவருக்கு மிகவும் அருமையானதோழர்களாக இருந்து வந்த பெரிய மனிதர்கள் சுமார் பதின்மர் இருந்தனர். அவர்களோடு தனியாக இருந்து, ஸ்திரீ விஷயமான