பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பூர்ணசந்திரோதயம்-1 இளவரசர் வெகு சுலபமாக ஏற்படுத்திக் கொள்ளலாம். நாம் ஆறுபேர் இருக்கிறோம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் ஆறு தினங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவர் ஒவ்வொரு கிழமையில் முயற்சிப்பதென்று வைத்துக் கொள்வோம். சூர.பாளையக்காரர்:- நல்ல ஏற்பாடுதான். திங்கட்கிழமை நான்தான் முயற்சிப்பேன். - கலி. மிட்டாதார்:- எல்லோரும் திங்கட்கிழமை தான் போவேன் என்பார்கள். ஒரே காலத்தில் ஆறு திங்கட்கிழமைகளுக்கு எங்கே போகிறது? அது உதவாது; அவரவர்களுடைய பட்டத்தின் வரிசைப்படி நாட்களை வைத்துக்கொள்வோம். முதல்நாள் இளவாசர் இரண்டாவது நாள் கிழவர்; மூன்றாவது நாள் நான்; அந்த மாதிரி வைத்துக்கொள்வோம். மரு.கிழவர்:அப்படியானால், இளவரசருக்குத்தான்.ஜெயம் கிடைக்கும். இந்தப் பந்தயமும் அர்த்தமில்லாத பந்தயமாகி விடும். நாம் போகாமலே இருந்துவிடலாம். 3. இளவரசர்:- (மகிழ்ச்சியோடு சிரித்து) கிழவர் சொல்வதும் நிஜந்தான். அதெல்லாம் வேண்டாம்; திருவுளச்சீட்டுப் போட்டு யார் யாருக்கு எந்தெந்தக் கிழமை வருகிறதோ, அந்தப்படி போவோம். அடேசாமளராவ் கொஞ்சம் காகிதம் கொண்டுவா என்றார். உடனே காகிதம் கொண்டுவரப்பட்டது. ஆறு துண்டுக் காகிதங்களில் ஆறு கிழமைகளின் பெயர்கள் தனித்தனியாக எழுதப்பட்டு மடிக்கப்பட்டன. அவ்வாறு மடிக்கப்பட்டவை கள் ஒரு பாத்திரத்தில் போட்டுக் குலுக்கப்பட்டன. உடனே இளவரசர் தங்களுடைய பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வர, உடனுக்குடன் ஒவ்வொரு சீட்டும் எடுத்துப் படிக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடியில் கண்டபடி கிழமைகள் ஏற்பட்டன.