பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 47 திங்கட்கிழமை கலியாணபுரம் மிட்டாதார் செவ்வாய்க்கிழமை சேரங்குளம் @mbಹTi புதன்கிழமை சூரக்கோட்டைப் பாளையக்காரர் வியாழக்கிழமை இளவரசர் வெள்ளிக்கிழமை மருங்காபுரி ஜெமீந்தார் சனிக்கிழமை சாமளராவ் மேலே குறிக்கப்பட்டபடி ஒவ்வொருவருக்கும் இன்ன கிழமை யென்று படிக்கப்பட்டபொழுது எல்லோரும் குதுகலமாகச் சிரித்து விளையாட்டாக ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளத் தொடங்கினர். எல்லோருக்கும் கிழமைகள் குறிக்கப்பட்டுப் போனவுடனே, இன்னார்தான் ஜெயிப்பார்கள் இன்னார் தோற்றுப் போவார்கள் என்ற சில யூகங்களும் செய்யப்பட்டன. சிலர்வேறு சிலரை நோக்கிப் புரளி செய்தனர். உடனே இளவரசர் மற்றவர்களை நோக்கி, 'சரி; முக்கியமான விஷயம் ஒருமாதிரியாக முடிந்தது. மேலே ஒப்புக் கொள்ளப்பட்டவைகள் போக, இன்னமும் இரண்டொரு நிபந்தனைகள் இருக்கின்றன. என்னவென்றால், நம் முள் யாராவது ஒருவர் அவளை வென்றுவிட்டால், அதன்பிறகு மற்றவர்கள் தங்களுடைய முயற்சியை அவ்வளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வென்றவருக்கே அவள் நிரந்தரமாக உரியவளாகி விடவேண்டுமன்றி, மற்றவர் அந்த விஷயத்தில் தலையிட்டு அவர்களிருவரது சுகத்தையும் குலைக்கக் கூடாது. அதற்காக, என்ன செய்ய வேண்டு மென்றால், யார் வெல்லுகி றாரோ அவர் உடனே நமக்கு அந்த விஷயத்தைத் தெரிவித்து, அவர் உண்மையிலேயே ஜெயித்து விட்டாரென்பதை நாம் நம்பும்படி மெய்ப்பிக்க வேண்டும். ஏனென்றால், மற்றவர்கள் தலையிடாமல் இருக்கட்டும் என்று நினைத்துப் பொய்யாகத் தாம் வென்றுவிட்டதாக யாராகிலும் சொல்லிவைத்து விட்டு,