பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பூர்ணசந்திரோதயம்-1 வாசலில் நின்று உட்புறத்தைப் பார்த்து மயங்கி நிற்பவர் போல உடல் சோர உயிர் ஊசலாட நின்றார். அப்போது திடீரென அவளது வாயிலிருந்து, "ஐயோ!' என்ற ஒரு கூக்குரலுண்டாயிற்று. அது புல்லாங்குழலின் ஒசைபோல அவரது மனதில் சரேலென்று பாய்ந்து இன்ப ஊற்றைப் பெருக்கியது. அந்தத் தோகை மயில் அவ்வாறு கூக்குரலிட்ட காரணமென்னவென அவர் கவனித்து பார்த்தார். அவளது கையில் அழகாக வீற்றிருந்த பஞ்சவர்ணக்கிளி கையைவிட்டுப் பறந்து இறகை அடித்துக் கொண்டு முன்புறத்திலிருந்த தோட்டத்திற்குள்போய் அதன் வேலியின் மீது உட்கார்ந்து கொண்டது. அப்போது அந்த வேலியின் அருகில் நின்று கொண்டிருந்த யெளவன புருஷர் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, அந்த அழகிய பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்துக் கொண்டார். தான் அருமையாக வளர்த்த அந்தக்கிளி பறந்து வேறு எங்கேயினும் ஒடிப்போகுமுன் அந்த யெளவன புருஷர் அதை ஜாக்கிரதையாகப் பிடித்துக்கொண்டதைக் கண்டு மிகவும் நன்றியறிதல் செலுத்துகிறவள்போல, அவள் தனது வசீகரமான முகத்தில் புன்னகை தோன்ற, வணக்கமாக அவரை நோக்கினாள். தாம் எதிர்பாராவிதம் நேர்ந்த அந்தச் சிறிய சம்பவம், தமக்கும் அந்தப் பெண்மணிக்கும் நட்புண்டாக ஒர் ஏதுவாக இருந்ததைக்கண்டு, ஆனந்தபரவசம் எய்தி மட்டுக் கடங்காப் பூரிப்பை அடைந்த அந்த யெளவன புருஷர், தாம் ஜெபம் பெறுவது நிச்சயமென்றும், கடவுளே தோன்றாத் துணைவராக இருந்து தமக்கும் அவளுக்கும் இவ்வாறு நட்பு செய்து வைக்கிறார் என்றும் நினைத்துக் கொண்டார். தாம் எப்படி அவளிடத்தில் பழக்கம் செய்துகொள்ளப் போகிறோம் என்று தவித்துத் தத்தளித்திருந்த சமயத்தில், நான் அபயஸ்தங் கொடுக்கிறேனென்று சொல்வதுபோல அந்தக் கிளி பறந்து வந்ததை நினைக்க, அவரது மனம் பரவச மெய்திப் பாகாய் உருகி ஓடியது. தமக்குப் பெருத்த பாக்கியம் கிடைக்குமென்பதற்கு அது ஒரு நல்ல சகுனமென்று நினைத்த