பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7 பார்க்கும் வரையில், அவரது மனம் அந்த ஒப்பந்த விஷயத்தில் ஒரே உறுதியாக இருந்தது. பூர்ணசந்திரோதயத்தை தாம் வென்று அவளை மருங்காபுரி ஜெமீந்தாருக்கும் கொடுத்துவிட வேண்டும் என்றும், அதற்கு கைம்மாறாக அவர் பார்சீ ஜாதி ஸ்திரியை வென்று தமக்குக் கொடுத்துவிடுவார் என்றும் எண்ணிக் கொண்டே போனார். ஆனால், அவர் போய் ப் பூர்ணசந்திரோதயத்தின் வசீகர வடிவத்தைக் கண்டதrணத்தில் அவரது மனதில் இருந்த பார்சீ ஜாதிப் பெண்ணின் வடிவம் சூரியன் முன் இருளென மறைந்து போய்விட்டது. அந்த இரண்டு பெண்மணிகளுள் மற்றவளைக் காட்டிலும், பூர்ணசந்திரோதயமே எல்லா அம்சங்களிலும் பதினாயிர மடங்கு சிறந்தவளாகவும், தமது மனதிற்கு உகந்தவளாகவும், தமக்கு நீடித்த ஆசை நாயகியாக இருப்பதற்குத் தகுந்தவளாக வும் காணப்பட்டாள். அவள் எப்போதும் தம் மோடுகூட இருந்தால், அவள் தமக்குப் பலவகையில் இன்பங்கொடுத்து சதா காலமும் தமது மனம் களிப்படைந்து இருக்கும் படி செய்யும் அபார வல்லமையும் அறிவு முதிர்ச்சியும் வாய்ந்தவள் என்பது இளவரசருக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அவள் தமது விஷயத்தில் சுலபமாக வழிக்கு வந்தாலும், அவளது பிரியத்தை எல்லாம் அவள் மருங்காபுரிக் கிழவரின் மேல் திருப்பச் செய்வது எவருக்கும் அசாத்தியமான காரியம் என்று இளவரசர் நினைத்ததன்றி, தாம் அவளிடத்தில் அப்படிப்பட்ட பிரஸ்தாபம் செய்வது ஆண்மைத்தனம் ஆகாதென்றும், அவள்மீது தாம் கொண்ட மோக வேட்கையை அடக்குவதே முதலில் துர்லபமான காரியம் என்றும் நினைத்தார். பூர்ணசந்திரோதயத்திற்கும் தமக்கும் நடக்கும் சந்திப்பின் விவரங்களை யெல்லாம் அப்படியே வெளியிடுவதாகத் தாம் மருங்காபுரி ஜெமீந்தாருக்கு வாக்குக் கொடுத்திருந்ததும் அவருக்கு நினைவுண்டாயிற்று. ஆகையால், தாம் என்ன செய்வது, அவரிடம் என்ன சொல்வது என்ற கேள்விகள் உண்டாயின. பூர்ணசந்திரோதயத்தை அருகில் பார்த்து, அவளது