பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


108 பூர்ணசந்திரோதயம்-2 அடைந்தவராய், அவளது அற்புத தேஜசில் தமது முழு மனதையும் லயிக்கவிடுத்து மிகமிக நைந்து இளகிய கனிவான குரலாகப் பேசத் தொடங்கி, "என் விலையில்லா மாணிக்கமே! என் கட்டிக் கரும்பே நான் இதுவரையில் எத்தனையோ ஸ்திரீகளிடத்தில் சிநேகம் செய்திருந்தாலும், அவர்கள் எல்லோரும் அழகிலும், புத்தி தீrண்யத்திலும், வாக்கு சாதுர்யத்திலும் உன்னுடைய காலில் ஒட்டிய தூசிக்கும் இணையாக மாட்டார்கள். எல்லா அம்சங்களிலும் இயற்கையிலேயே ஜனித்த ஒரு சக்கரவர்த்தினி போலவே நீ காணப்படுகிறாய். காமதேனுவும் கற்பகத்தருவும் எவர்க்கா கிலும் கிடைக்குமானால், அவர் அவைகளை எத்தனை கற்ப காலம் வைத்திருந்தாலும் அவைகளிடத்தில் வெறுப்பாவது தெவிட்டலாவது உண்டாகுமா? ஒருநாளும் உண்டாகாது. நான் உன்னை என்னுடைய ஆயிசு காலபரியந்தம் கைவிடுகிறது இல்லை. உன்னை அன்றி நான் இனி வேறே ஸ்திரீகளின் முகத்தையும் பார்க்கிறதில்லை. அது மாத்திரமல்ல. எனக்கு அபரிமிதமான செல்வம் இருக்கிறது. என்னுடைய ஜெமீன் கிராமங்களில் வருஷத்தில் ஒரு லக்ஷம் ரூபாய் வருமானமுள்ள நல்ல கிராமங்களாகப் பார்த்து உன்பேரில் சாசுவதமாக மாற்றி எழுதிக் கொடுத்துவிடுகிறேன். அதுவும் அன்றி, எனக்கு வரும் ஏராளமான மற்ற திரவியங்களுக்கு எல்லாம் நீயே உரியவளாக இருந்து உனக்குத் தேவையானபடி அவைகளைச் செலவு செய்து நீ சந்தோஷப்பட உனக்கு நான் பூரணமான அதிகாரமும் கொடுத்துவிடுகிறேன். இந்த உறுதி போதுமா? இனியும் நான் உன்னை நாற்காலியில் சிறை வைத்திருப்பது நியாயமாகாது. இதோ உன்னை நான் ஒரு நொடியில் விடுவிக்கிறேன். நாற்காலியிலிருந்து எழுந்தவுடனே நீ ஆசையோடு என்னைக் கட்டி அணைத்து முத்தமிட்டு, நாம் செய்துகொண்ட ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும் ' என்று கூறியவண்ணம், அவள் இருந்த நாற்காலிக்குப் பின்னால் பாய்ந்து அவ்விடத்தில் மறைந்திருந்த