பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ഖപ്പെ கே. துரைசாமி ஐயங்கார் - 107 அடைந்தவராய்க் கரை கடந்த உருக்கமும் மயிர் சிலிர்ப்பும் நைவும் கொண்டவராய் அவளை நோக்கி, 'என் ஆருயிர்க் கண்ணாட்டி பூர்ணசந்திரா இளவரசர் உன் விஷயத்தில் தவறு செய்தது எனக்கு ஏற்படப் போகும் பெருத்த பாக்கியத்தின் வலுவினாலேயே நடந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நீ சொல்வது உண்மை என்பது நீ இங்கே வந்ததிலிருந்தே நிச்சயமாகத் தெரிகிறது. அதைப்பற்றி நான் கொஞ்சமும் சந்தேகமே கொள்ளவில்லை. நீ இனி எப்போதும் எனக்கே உரியவளாய் என்னிடத்திலேயே இருந்துவிட சம்மதந் தானா? அதை உன் வாயால் வெளியிட்டுச் சொன்னால் அன்றி நான் உண்மை என்று ஒரு நாளும் நம்ப மாட்டேன்’ என்றார். பூர்ணசந்திரோதயம் மிகுந்த நாணமும், இன்பமும் துன்பமும் கொண்டு தத்தளிப்பவள்போல நடித்து, 'இவ்வளவு தூரம் திறந்து நான் வெளிப்படையாகச் சொல்லுகிறேனே! இன்னமும் சந்தேகமா? என்னுடைய காதலை எல்லாம் நான்தங்களிடத்தில் திருப்பிவிட்டேன். இனி நான் தங்களை என்னுடைய உயிர் நிலைபோல மதிப்பேன் என்பதைத் தாங்கள் வேதவாக்கியமாக நம்பலாம். ஆனால், இன்னொரு சந்தேகம்! தாங்களோ மகா பெரிய செல்வந்தர். என்னைக் காட்டிலும் அழகில் சிறந்த எத்தனையோ பெண்களைத் தாங்கள் இதுவரையில் பார்த்தும் நேசித்தும் இருப்பீர்கள். இனியும் நேசிக்கப் போகிறீர்கள். அப்படியிருக்க தங்களுடைய பிரியமும் அன்பும் என்னிடத்தில் எப்போதும் நீடித்து நிற்கப் போகிறதா? தாங்கள் என்னுடைய ஆயிசுகால பரியந்தம் என்னைச் சந்தோஷமாக வும் செல்வத்திலும் வைத்திருப்பீர்களா? அதை மாத்திரம் தாங்கள் உறுதியாகச் சொல்ல வேண்டும். அவ்வளவுதான் நான் கோருவது' என்று கிள்ளைபோல மாதுரியமாக மொழிந்தாள். அந்த சொல்லைக்கேட்ட மருங்காபுரி ஜெமீந்தார் கண்கொள்ளா எழில்வழிந்த அவளது அங்கத்தை ஏற இறங்கப் பார்த்து, நிகரற்ற அவளது சிற்றின்ப சாகரத்தில் தாம் வெகு - சீக்கிரத்தில் ஆழ்ந்து சுகிக்கலாம் என்ற நினைவினால் பரவசம்