பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


106 பூர்ணசந்திரோதயம்-2 யும் வெளியிட்டு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார். ஆனால், தாங்கள் இப்படி வஞ்சகமாக வண்டி அனுப்பி என்னை அழைத்துவரச் சொன்னதைப் பற்றி நான் தங்கள்மேல் குறை கூறுவது சரியல்ல. காதலர் காதலியை அடைவதற்கு எத்தனையோ தந்திரங்கள் செய்வார்கள். அது காதல் தருமத்துக்குச் சம்மதமானதே. அதோடு, இன்றைய தினம் தங்களுடைய முறையாகையால், தாங்கள் இளவரசரிடத்தில் மோசடியாக நடந்ததாகவும் சொல்ல இடமில்லை. ஆகையால், தங்களிடத்தில் எனக்கு வருத்தமாவது கோபமாவது உண்டாக வில்லை. இந்த அறுவரில் அந்தஸ்தில் இளவரசருக்கு அடுத்த படியானவர்கள் தாங்களே. ஆகையால், இளவரசரை விலக்கி விட்டுத் தங்களையே அடைந்துவிட வேண்டும் என்ற உறுதி செய்துகொண்டவளாய், நான் வண்டியை விட்டுக் கீழே இறங்கியவுடனே தடதடவென்று நானே உள்ளே நுழைந்து இங்கே வந்து விட்டேன். எனக்கு இங்கே வர வேண்டும் என்ற ஆசையில்லாது இருந்தால், நான் வண்டியை விட்டு இறங்கிப் போக முயன்றிருப்பேன். தங்களுடைய வேலைக் காரர்கள் என்னைப் பலவந்தமாக வண்டியில் வைத்து இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க முடியாது. நான் வண்டியில் இருந்தபடி கூச்சலிட்டிருந்தால், இந்த வடக்கு ராஜ வீதியிலுள்ள ஜனங்கள் எல்லாரும் ஒரே நொடியில் வந்து கூடி என்னை விடுவித்திருப்பார்கள். அப்படி இல்லாமற் போனாலும், நான் தப்பி ஓடிப்போக நினைத்திருந்தால், வண்டியை விட்டு இந்த மாளிகையின் வாசலில் இறங்கிய வுடனே ஒட்டம் பிடித்திருப்பேன் அல்லவா? அப்படி எல்லாம் செய்யாமல் சுலபமாக நான் வந்தது, நான் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கவில்லையா?" என்று மிகவும் வசீகரமான புன்னகையாக மொழிந்தாள். அவள் சொன்னவரலாற்றைக்கேட்டமருங்காபுரி ஜெமீந்தார் தாம் எதிர்பாராதபடி தமக்கு வந்து வாய்த்த அந்தப் பெரிய அதிர்ஷ்டத்தைக் கண்டு களிகொண்டு ஆனந்த பரவசம்