பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 121 களையெல்லாம் மதியாமல், எனக்கு வர வேண்டிய அபார செல்வத்தையும் பொருட்படுத்தாமல் நீங்களேகதியாக இருந்து வந்திருக்கிறேன். நீங்கள் செய்த கொலைக் குற்றத்திலிருந்து உங்களைத் தப்ப வைப்பதற்காக, நான் எவ்வளவோ கேவலமான காரியங்களைச்செய்ய சம்மதித்து மிகவும் துணிகர மான விஷயங்களை நடத்தியிருக்கிறேன். அதையெல்லாம் கொஞ்சமும் நினையாமல் என்னிடத்தில் இப்படி புது மாதிரியாக நடக்கவேண்டிய காரணம் என்ன? இந்த மனிதன் இந்த நடுராத்திரியில் எதற்காகக் குழிதோண்டுகிறான்? நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? என் மனம் பதறுகிறதைக் கருதியாவது உண்மையை வெளியிடக் கூடாதா? அங்கே வர எனக்கு நிரம்பவும் பயமாக இருக்கிறது. நான் இவ்விடத்தி லேயே இருக்கிறேன். நீங்கள் போய் விட்டு வாருங்கள்' என்று உருக்கமாகவும் பரிதாபகாரமாகவும் கூறி அப்படியே நின்றுவிட்டாள். உடனே அந்தப் புருஷர் முன்னிலும் அதிகரித்த சினங்கொண்டு மூர்க்கமான பார்வையாக அவளைப் பார்த்து, 'இப்போது நீ மரியாதையாக நடந்து பேசாமல் வந்தால் தப்புவாய். இல்லாவிட்டால், உன்னையும் உன்னுடைய ஆசை நாயகனோடு சேர்த்து அந்தக் குழிக்குள் போட்டுப் புதைத்து விடுவேன். யாரிடத்தில் உன்னுடைய மாயமான வித்தையை எல்லாம் காட்டுகிறாய்? நீ இதுவரையில் பதிவிரதைத்தனம் கொண்டாடி என்னை ஏமாற்றினதுபோல இனியும் செய்யலாம் என்று நினைக்காதே; உன்னுடைய யோக்கியதை எவ்வளவு என்பது எனக்கு நன்றாகத் தெரிந்து போய் விட்டது. ஒன்றையும் அறியாதவள்போல நீ இனியும் பாசாங்கு பண்ணுவதில் கொஞ்சமும் உபயோகமில்லை. காலதாமசம் ஆகிறது; நிற்காதே; நட, சீக்கிரம் ஆகட்டும்' என்று கூறி, அவளது கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக்கொண்டு விசையாக நடந்து லாந்தர் இருந்த இடத்தை நோக்கிச்